புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை போலீஸ் இழுத்து செல்லும் வீடியோவா ?

பரவிய செய்தி

இவரு வேர யாரும் இல்லை நண்பர்களே நம்ம புது ஆளுநர் !

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரின் நியமனத்திற்கு தமிழ்நாடு பாஜக தரப்பிலும், ஆதரவாளர்களும் வரவேற்பு அளித்தனர். எனினும், காங்கிரஸ் உள்ளிட்டவர்கள் அவரின் நியமனத்தை சந்தேகித்தனர்.

Advertisement

இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள ஆர்.என்.ரவியை போலீஸ் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றுவதாக 1.15 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், ” 2021 ஆகஸ்ட் 28-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக போலீஸ் கைது செய்வதாக ” இதே வீடியோ கோப்ரா போஸ்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது நண்பர் சமீபத்தில் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஆகஸ்ட் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

Archive link  

அவரின் கைது நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோவே இது. இந்த வீடியோவை உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பவர் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button