உங்களின் வாட்ஸ் அப் உரையாடலை அரசு படித்து கண்காணிக்கிறதா ?

பரவிய செய்தி
தெரிந்து கொள்வோம் ! அனைவருக்கும் பகிர்வோம்.
Whatsapp அனுப்புவர்கள் கவனத்திற்கு ….
- நீங்கள் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினால் – ஒரு டிக் வரும்.
- செய்தி சேர்ந்து விட்டால் – இரண்டு டிக் வரும்.
- இந்த இரண்டு டிக்குகளும் நீல நிறத்தில் தோன்றினால் நீங்கள் அனுப்பிய செய்தி படிக்கப்பட்டுவிட்டது.
- மூன்று டிக்குகளும் நீலநிறத்தில் தெரிந்தால் நீங்கள் அனுப்பிய செய்தியை அரசு கண்காணிக்கிறது என்று அர்த்தம்.
- இந்த மூன்றில் இரண்டு நீலநிறமும் , ஒரு சிவப்பு நிறமும் தெரிந்தால் அரசாங்கம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவிக்கின்றது.
- ஒரு நீல நிறமும் இரண்டு சிவப்பு நிறமும் தெரிந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
- மூன்று கோடுகளும் சிவப்பு நிறமாகத் தெரிந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவிட்டது. நீதிமன்றம் சம்மன் அனுப்பும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
வாட்ஸ் அப்பில் தனிபர் உரையாடலை அரசு படித்து கண்காணித்து வருவதாக ஃபார்வர்டு செய்தி ஒன்று வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. நீங்கள் அனுப்பும் செய்தியை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க உள்ளதை அறிந்து கொள்ள எத்தனை டிக்குகள் மற்றும் எந்த வண்ணத்தில் டிக்குகள் இருக்கும் என ஃபார்வர்டு செய்தியில் விவரித்து உள்ளனர். இந்த ஃபார்வர்டு செய்தி இந்திய அளவில் வைரலாகி உள்ளது.
உண்மையில், வாட்ஸ் அப்பில் தனிநபரின் உரையாடல்களை அரசால் படிக்க முடியாது. ஏனென்றால், அரசு மட்டுமின்றி, மூன்றாம் தரப்பினரால் கூற வாட்ஸ் அப் சாட் மற்றும் அழைப்புகளை அணுக முடியாது. வாட்ஸ் அப்பில் அனைத்து செய்திகள் மற்றும் அழைப்புகள் end-to-end encrypted முறையில் உள்ளன.
மேலும் படிக்க : செல்போன் உரையாடலை ரெக்கார்ட் செய்யும் அரசு: வாட்ஸ் ஆஃப் வதந்தி..!
உங்களின் வாட்ஸ் அப் செயலியில் Settings பகுதிக்கு சென்று Help-ல் FAQ என்ற பக்கத்திற்கு செல்லவும். அங்கு, security and privacy என்ற விருப்பத்தில் சென்று Checking Read Receipts என்ற பக்கத்திற்கு சென்றால், செய்தியை பார்த்தால் காண்பிக்கும் டிக்குகள் குறித்து விவரித்து இருப்பார்கள்.
வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் செய்திகளுக்கு இரண்டு டிக்குகளுக்கு மேலே செல்வதில்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். சமூக வலைதள கணக்குகளை அரசு கண்காணிப்பதாக பலமுறை வதந்திகள் பரவி உள்ளனர். அவற்றில், வாட்ஸ் அப் உரையாடல்களை அரசு கண்காணிக்கிறதாக பரவும் செய்தியும் ஒன்றாக இருக்கிறது. தவறான ஃபார்வர்டு செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.