This article is from Mar 11, 2019

உலகம் பசுமையாவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனா.

பரவிய செய்தி

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் பசுமையாக மாறியுள்ளதாகவும். இவற்றிருக்கு இந்தியாவும், சீனாவுமே முதன்மையானதாகத் திகழ்வதாக நாசா தெரிவித்து உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

எது உண்மை : நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தியா மற்றும் சீனாவின் நிலத்தில் பசுமையாதல் அதிகரித்து வருவதாவும், இரு நாட்டிலும் உள்ள தீவிர வேளாண்மையால் அவை உருவாகியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எது பொய் : 20 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு என்பது தவறான தகவல். ஒவ்வொரு ஆண்டிலும் பசுமையாதல் நிலப்பரப்பின் அளவு அதிகரித்து வருகிறது. ஒரே ஆண்டில் நிகழ்ந்தவை அல்ல.

விளக்கம்

நாசாவின் ஆய்வு கட்டுரையில், உலகம் பசுமை வளர்ச்சிக்கு மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் முன்னெடுப்புகளை கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை, சீனாவின் முக்கிய நோக்கமான மரம் நடும் திட்டங்கள் மற்றும் இரு நாடுகளிலும் உள்ள தீவிர வேளாண்மை உள்ளிட்டவையின் விளைவால் உருவாகின்றன என குறிப்பிட்டு உள்ளனர்.

199௦-ல் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் Ranga Myneni மற்றும் சக ஊழியர்கள்  சார்பில் பசுமையாதல் குறித்து செயற்கைக்கோள் தரவுகள் மூலம் கண்டுபிடித்தனர். ஆனால், அதன் பிரதான காரணிகளில் மனிதர்களின் செயல்பாடு ஒன்றாக இருப்பதை அறியவில்லை.

2000-ல் இருந்தே பூமியின் சுற்றுவட்டப் பகுதியில் நாசாவின் செயற்கைக்கோள் கருவிகளின்  நீண்ட கால தரவுகள்  மூலம் இந்த புதிய உள்நோக்கு சாத்தியமானது. MODIS (Moderate Resolution imaging Spectroradiometer)  என்பதன் மூலம் உயர்தர மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கியது. இதில், பூமியின் நிலப்பரப்பில் தாவரங்களின் நிலைப்பாடு குறித்த ஆராய்ச்சிக்கு உதவியது.

கடந்த 20 ஆண்டுகளாக பூமியின் நிலப்பரப்பில் பசுமையானது, அமேசான் மழைக்காடுகளால் சூழப்பட்ட  பகுதிக்கு சமமாக தாவரங்கள் மற்றும் மரங்களின் மீதான பசுமை இலைகளின் அதிகரிப்பை பிரதிப்பலிக்கின்றது.

2000 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, வருடத்திற்கு 2 லட்சம் சதுர மைல்கள் அளவிற்கு பசுமை இலை பகுதிகள் கூடுதலாக இருப்பதாவும், இது 5% அதிகரிப்பு எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

பசுமையாக்குதலில் சீனா மற்றும் இந்தியா மூன்றில் ஒரு பங்கை கொண்டு இருக்கிறது, ஆனால், 9% தாவர நிலங்கள் மட்டுமே தாவரங்களால் நிறைந்து உள்ளதாக  கூறப்படுகிறது.

இந்தியாவிலும் சீனாவிலும் பயிர்கள் வளரப் பயன்படும் நிலப்பரப்பை ஒப்பிடத்தக்கது. இவை இந்தியாவில்  7,70,000  சதுர மைல்களுக்கும் அதிகம்.  ஆனால், 2000-க்கு முந்தைய பகுதியில் இருந்தே இது அதிகம் மாறவில்லை. மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதால் 2000-ல் இருந்து தானியங்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிடவையின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

மனிதர்களின் செயல்பாடுகளால் உலகில் பசுமையாதல் அதிகரித்து வருவதில் சீனா மற்றும் இந்தியாவை பொறுத்தவரையில் சர்வதேச சராசரி 2.3-ஐ வவிட அதிகமாகவே உள்ளது.

மனிதர்களின் நேரடி செயல்பாடே பூமி பசுமையாவதை அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு இந்தியா மற்றும் சீனாவில் தாவரங்களின் இழப்பு பெரிதாக நினைக்காமல் இருந்துள்ளனர். ஆனால், தற்போது அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்பட்டு வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆண்டுகள் நீண்ட  தரவுகளின் படி பூமியின் பசுமை பரப்பு அதிகரித்து வருவது பற்றிய நாசாவின் ஆய்வுக் கட்டுரை விவரித்து உள்ளது.

விவசாயம் செழிக்க வேண்டும், மரங்களை பாதுகாத்து மழைப் பொழிவை அதிகரிக்க வேண்டும் என்பது போன்ற காரணிகளால் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்து இல்லாத பசுமை உலகினை படைக்க இயலும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader