வரதட்சணையால் திருமணத்தை நிறுத்திய மணமகன் என வைரலாகும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
வரதட்சணை வேணும்? கல்யாணத்தை நிறுத்திய கையாலாகாத மாப்பிள்ளை ! மகளீர் தினத்தில் இப்படியா?
மதிப்பீடு
விளக்கம்
பீகாரில் அரசு பணியில் இருக்கும் மணமகன் அதிக வரதட்சணை கேட்டு மணப்பெண் வீட்டில் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்தியதாக 2 நிமிட வீடியோ ஒன்று இந்திய அளவில் வைரலாகி வருகிறது. மகளிர் தினத்தில் கூட இப்படியா என Behindwoods முகநூல் பக்கத்தில் இவ்வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்கள்.
दहेज
इस कालू के कान के नीचे 10 तमाचा मारो pic.twitter.com/DPF2fm02Xl— हम लोग We The People (@humlogindia) March 6, 2022
” வரதட்சணை கேட்பதில் தவறில்லை, திருமணம செய்ய மறுத்த மணமகன் ” என ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் வைரல் வீடியோ குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், பிப்ரவரி 25-ம் தேதி Divya vikram எனும் முகநூல் பக்கத்தில் வைரல் செய்யப்படும் வீடியோ பதிவாகி இருக்கிறது. இது உண்மையான நிகழ்வு அல்ல. அந்த முகநூல் பக்கத்தில் வைரல் வீடியோவை போல் திருமணம் தொடர்பாக சில வீடியோக்கள் இருப்பதை பார்க்க முடிந்தது.
இதுமட்டுமின்றி, வைரலான வீடியோவில் இடம்பெற்ற இருவரையும் வைத்து மணமகன் குடிபோதையில் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவை சமீபத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : மணமகன் வாயில் குட்கா, பளார் விட்ட மணமகள்.. வைரல் வீடியோ உண்மைதானா ?
இதேபோல், 2021 செப்டம்பர் மாதம் மணமகன் வாயில் குட்கா இருந்ததால் மணமகள் அடித்ததாக யூடியூப் சேனலில் சித்தரிக்கப்பட்டு வெளியான வீடியோவை உண்மை என நினைத்து தமிழ் செய்தி ஊடகங்களிலும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இப்படி விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட வீடியோக்கள் வைரலாகும் போது அதன் உண்மைத்தன்மையை அறியாமலேயே செய்தி ஊடகங்கள் வெளியிடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
முடிவு :
நம் தேடலில், வரதட்சணை கொடுக்காததால் அரசு பணியில் இருக்கும் மணமகன் திருமணத்தை நிறுத்தியதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அது உண்மையான நிகழ்வு அல்ல, சித்தரிக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.