மணமகளின் தோழிக்கு தாலிக் கட்டிய மணமகன் என வைரலாகும் சீரியல் வீடியோ !

பரவிய செய்தி

புதுப்பேட்டை பட பாணியில் திருமணத்தில் Twist.. Girl Bestie மீது பாய்ந்து தாலி கட்டிய மாப்பிள்ளை.

மதிப்பீடு

விளக்கம்

மணமேடையில் மணப்பெண்ணிற்கு தாலிக் கட்டும் நேரத்தில் பின்னால் இருந்த மணப்பெண் தோழிக்கு மணமகன் தாலி கட்டியதாக 15 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இது எங்கு நிகழ்ந்தது எனத் தெரியாமல் புதுப்பேட்டை பட பாணியில் நடைபெற்ற திருமணம் என வீடியோவின் சிறு காட்சி மட்டும் சுற்றி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரலாகும் வீடியோ உண்மையில் திருமணத்தில் நிகழ்ந்த சம்பவம் அல்ல, அது தொலைக்காட்சி சீரியலுக்காக நடைபெற்ற ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட காட்சியே.

தெலுங்கில் ஜீ தொலைக்காட்சியில் ” muthyamantha muddu ” எனும் பெயரில் ஒளிபரப்பு செய்யப்படும் நாடகத்திற்காக நடைபெற்ற ஷூட்டிங் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்து வெளியிட்டு உள்ளனர். அந்த காட்சி அடங்கிய வீடியோ இன்னும் தொடரில் வெளியாகவில்லை.

Advertisement

அந்த ஷூட்டிங் போது முதலில் மணமகனாக நடிக்கும் நடிகர் பின்னால் இருக்கும் பெண்ணிற்கு பதிலாக மாமியாருக்கு தாலி கட்ட சென்றதால் அங்குள்ளவர்கள் சிரித்துள்ளனர், பின்னர் மீண்டும் எடுக்கப்பட்ட காட்சி என இரு வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முடிவு :

நம் தேடலில், புதுப்பேட்டை பட பாணியில் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு பதிலாக மணப்பெண்ணின் தோழிக்கு மணமகன் தாலிக் கட்டியதாக பரவும் வீடியோ தெலுங்கு சீரியலுக்காக நடைபெற்ற ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட காட்சி என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button