5000 கோடி வங்கி மோசடி செய்து நைஜீரியா தப்பிய குஜராத் தொழிலதிபர் ?

பரவிய செய்தி

5000 கோடியுடன் மீண்டும் ஒரு குஜராத் தொழிலதிபர் நிதின் சந்தேசரா நைஜீரியாவுக்கு ஓட்டம்.

மதிப்பீடு

விளக்கம்

2018-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, சுமார் 11,360 கோடிக்கு அளவிற்கு முறையற்ற பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி மோசடியானது தங்கள் வங்கியில் நிகழ்ந்துள்ளது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிக்கை வெளியிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,360 கோடி அளவிற்கு முறையற்ற பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். அந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

Advertisement

Facebook link | Archived link 

இதேபோல், குஜராத் தொழிலதிபர் நிதின் சந்தேசரா என்பவர் ரூ.5000 கோடி வங்கி முறைகேடு செய்து விட்டு நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றதாக செப்டம்பர் 28-ம் தேதி பதிவிடப்பட்டுள்ள மீம் ஒன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர் கேட்டுக் கொண்டார்.

எப்பொழுது நிகழ்ந்தது ? 

குஜராத் தொழிலதிபர் நிதின் சந்தேசராவின் வங்கி முறைகேடு குறித்து தேடிய பொழுது 2018-ல் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.

Advertisement

” குஜராத் மாநிலத்தின் வதோதராவில் இயங்கி வந்த ஸ்டெர்லிங் பயோடெக் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் யுகோ, ஆந்திரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் அலகாபாத் உள்ளிட்ட வங்கிகளில் சுமார் 5000 கோடிக்கும் அதிகமான தொகை கடனாக பெறப்பட்டுள்ளது.  அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான நிதின் சந்தேசரா மற்றும் அவரின் சகோதரர்கள் மீது ரூ.5700 கோடி வங்கி மோசடி குறித்து வழக்கு பதிவு செய்துள்ளது அமலாக்கத்துறை.

இதையடுத்து, 4,700 கோடி மதிப்பிலான அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. எனினும், நிதின் சந்தேசரா ஐக்கிய அரபு அமீகரத்தில் உள்ள அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பின்பு அதிகரிகளால் மறுக்கப்பட்டன. மேலும், புகார்கள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக இந்தியாவில் இருந்து நிதின் சந்தேசரா குடும்பம் நைஜீரியா நாட்டிற்கு தப்பி சென்ற தகவலை அதிகாரிகள் கூறியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : ரோட்டோமேக் பேன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தப்பி ஓட்டமா ?

2019 ஜூன் மாதம் எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியான தகவலில், ” அமலாக்க இயக்குனரகம்(ED) ஆனது 2004-2012 ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் கடல் கடந்து உள்ள இந்திய வங்கிகளில் பண மோசடி செய்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் ரூ.9.778 கோடி மதிப்பிலான சொத்துக்களை விசாரணையில் இணைத்து உள்ளனர் ” .

அமலாக்க இயக்குனரகத்தின் உயர் அதிகாரி கூறுகையில், ஏஜென்சி விசாரணையில் இணைத்த நிறுவனத்தின் சொத்துக்கள் பல நாடுகளில் உள்ளன.  அதில், நைஜீரியா நாட்டில் எண்ணெய் கிணறு, லண்டனில் விமானம், பங்காள உள்ளிட்டவை அடங்கும் ” என தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க : கடந்த நான்கு ஆண்டில் வங்கி கடன் மோசடி ரூ.77,500 கோடி – RTI தகவல்.

வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாக பெறும் தொழிலதிபர்கள் அதனை திருப்பி செலுத்தாமல் அயல்நாடுகளுக்கு தப்பிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. யார் ஆட்சியில் இருந்தாலும் வங்கி மோசடிகள் தொடர்கின்றன.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button