குஜராத் அரசு மருத்துவமனை என சிங்கப்பூர் ஓட்டலின் படத்துடன் வைரலாகும் நையாண்டிப் பதிவு !

பரவிய செய்தி

குஜராத் அரசு மருத்துவமனை.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரில் இயங்கும் அண்ணாமலை ஆர்மி எனும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து குஜராத் அரசு மருத்துவமனை என ஒளி மின்னும் ஆடம்பர கட்டிடம் ஒன்றின் புகைப்படமானது பதிவிடப்பட்டிருந்தது.

ஆனால், புகைப்படத்தில் இருப்பது சிங்கப்பூர் நாட்டில் இருக்கும் மெரினா பே எனும் ஆடம்பர ஓட்டல்(Marina Bay Luxury Hotel) என்றும், இதை குஜராத் மாநிலத்தின் அரசு மருத்துவமனை என பாஜகவினர் பரப்பி வருவதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

வைரலான புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜிங் சர்ச் மூலம் தேடியதில் அந்தக் கட்டிடம் சிங்கப்பூரில் இருக்கும் மெரினா பே ஆடம்பர ஓட்டல் எனத் தெரிய வந்தது.

இதனைப் பதிவிட்ட அண்ணாமலை ஆர்மியின் ட்விட்டர் பக்கம் குறித்து ஆராய்கையில், அதன் உண்மைப் பெயர் @KarthikGnath420 என இடம்பெற்று இருக்கிறது. மேலும் அண்ணாமலை ஆர்மி ட்விட்டர் கணக்கின் கவர் படத்தில் சவார்க்கரை கிண்டல் அடிக்கும் விதமாக ஒரு படத்தைப் பதிவிட்டிருந்தனர்.

இதிலிருந்து அண்ணாமலை ஆர்மி என்பது ஒரு நையாண்டி(ட்ரோல்) பக்கம் எனத் நமக்கு தெரியவருகிறது. பாஜக மட்டும் வலதுசாரிகளைக் கிண்டல் அடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ட்விட்டர் பக்கம். இந்த ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை ட்ரோல் செய்யும் பல பதிவுகள் பதிவாகி இருக்கிறது.

Archive link 

மேலும், நையாண்டிக்காக குஜராத் அரசு மருத்துவமனை எனப் பதிவிடப்பட்ட ஒரு பதிவை உண்மை என நம்பி சிலர் அதற்குப் பதிலளித்து வருகின்றனர்.

பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் குஜராத் மாடல் எனக் கூறி இதுப்போன்று பொய்யான புகைப்படங்களை பரப்பிய வரலாறு இருப்பதால் இந்தப் பதிவும் உண்மை என நம்பி சிலர் அந்த நையாண்டி பதிவிற்குப் பதிலளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: குஜராத், ம.பி கோவில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம் !

மேலும் படிக்க:  டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை திட்டம் என தவறான புகைப்படத்தை பதிவிட்டு நீக்கிய நிதின் கட்கரி !

மேலும் படிக்க:  பாலைவனமாக இருந்த பகுதியா இப்படி மாறியுள்ளதா ?

இதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டி அம்மாநில மக்களுக்கு ஆர்எஸ்எஸ் அர்பணித்ததாக பென்டகனின் புகைப்படத்துடன் நையாண்டியாகப் பதிவிடப்பட்ட பதிவு ட்ரோலுக்கு உள்ளானது.

மேலும் படிக்க : அமெரிக்க பென்டகனை குஜராத் மருத்துவமனை என நையாண்டியாகப் பதிவு !

முடிவு :

நம் தேடலில், அண்ணாமலை ஆர்மி எனும் ட்விட்டர் பக்கத்தில் குஜராத் அரசு மருத்துவமனை என சிங்கப்பூர் ஆடம்பர ஓட்டலின் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டது நையாண்டிப் பதிவு. அது ட்ரோல் செய்யும் போலியான ட்விட்டர் பக்கம். இதை உண்மை என நம்பி சிலர் அதற்குப் பதில் அளித்து வருகின்றனர் என நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது

Please complete the required fields.




Back to top button
loader