ஐபிஎல்-ல் மைதானத்தை உலர்த்த ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தியதாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
உலக தரம் வாய்ந்த மைதானம்ன்னு சொன்னது எல்லாம் பொய்யா கோபால்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த மே 28 அன்று நடக்க வேண்டிய ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மழையின் காரணமாக அடுத்த நாளான மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், கடந்த மே 29 அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் போதும் மழை வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கிரிக்கெட் மைதானத்தில் உள்ள தண்ணீரை ஸ்பாஞ்சை பயன்படுத்தி அகற்ற முயன்ற காட்சிகள் விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், உலக தரத்தில் உள்ள மைதானத்தை உலர்த்த ஹேர் ட்ரையரும், அயர்ன் பாக்ஸ்ம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
#IPL_க்ளிக்
மோடி ஊர்காரனுக்கு சுத்தமா
அறிவு இல்லையாடா ?Pitch ready பண்ண
ஒருபக்கம் Hair Dryer Ok
அதென்னடா Iron Box…உண்மையிலேயே…
குஜராத் மாடல் வேற லெவல்!
சென்னைகிட்ட வேணாம்டா pic.twitter.com/AacjFMolKI— TAMIZHAN JEYAKUMAR (@jaikumar0431974) May 30, 2023
ஸ்பான்ச்சையும் ஹேர் ட்ரையரையும் கொண்டு பிட்ச்சை உலர்த்திக்கிட்டு இருக்கானுவ🤦♂️😂😂😂
செம்ம டெக்னாலஜில்ல??🤣🤣🤣
டேய்ய்ய் பொறுக்கி @annamalai_k , மோடி ஸ்டேடியத்தில #GujaratModel சூப்பர்டா👌👏👏👏#CSKvGT #IPL2023Finals #GTvCSK pic.twitter.com/YSZhpu8MF9
— Surya Born To Win (@Surya_BornToWin) May 29, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இப்புகைப்படமானது கடந்த 2020ல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை காண முடிந்தது.
கடந்த 2020 ஜனவரி 05 அன்று Dr Nimo Yadav எனும் ட்விட்டர் பக்கத்தில் “அஸ்ஸாம் கவுகாத்தியில் நடைபெற இருந்த சர்வதேச போட்டி கைவிடப்பட்டது. இது மிகவும் வெட்கக்கேடானது, பிசிசிஐ ஒரு பணக்கார நிறுவனம், அவர்கள் இந்த அயர்ன் பாக்ஸ்-ஐ மைதானத்தை உலர்த்த பயன்படுத்தியிருக்கிறார்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.
International match in Guwahati Assam has been abandoned.
It’s such a shame, BCCI is richest board and we are using this Iron In the name of Drainage facility.
We all know this is a plan of modi shah to ruin Assam.
Period pic.twitter.com/0HJlNCd6ox
— Dr Nimo Yadav (@niiravmodi) January 5, 2020
இதுகுறித்து தேடியதில், CricTracker என்னும் ஊடகம் தற்போது பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு 2020 ஜனவரி 05 அன்று கட்டுரை வெளியிட்டுள்ளதை காண முடிந்தது. அதில் “2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் டி20 சர்வதேசப் போட்டி மழை காரணமாக நின்றது. முதலில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க இருந்த போட்டி, டாஸ் முடிந்து மழை பெய்ததால் தாமதமானது.
பின்னர் இரவு 8.45 மணியளவில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அஸ்ஸாம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஈரத்தை உலர்த்துவதற்கு ஊழியர்கள் ஹேர் ட்ரையர் மற்றும் அயர்ன் பாக்ஸை கொண்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.
இதே போன்று இந்தியா டுடே 2020 ஜனவரி 20 அன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியா டாஸ் வென்ற பிறகு, மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஈரமான ஆடுகளத்தை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையர் மற்றும் அயர்ன் பாக்ஸை பயன்படுத்தியதை கவுகாத்தி மைதான ஊழியர்கள் கண்காணித்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் தொடர்பான செய்திகளை ஆய்வு செய்ததில், கடந்த மே 29 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈரத்தை உலர்த்த ஸ்பாஞ்ச் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் அறிய முடிந்தது.
look at this advanced technology being used to dry the wet outfield at narendra modi stadium pic.twitter.com/t5AezW2kFm
— de little delulu show (@MrNarci) May 29, 2023
மேலும் படிக்க: CSK அணிக்காக குஜராத்தில் கூடிய லட்சக்கணக்கான ரசிகர்கள் எனப் பரவும் தவறான புகைப்படங்கள் !
இதற்கு முன்பும், ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் CSK அணிக்காக கூடிய கூட்டம் என்று பரவிய தவறான செய்தி தொடர்பாக கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மழை காரணமாக ஏற்பட்ட ஈரப்பதத்தை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது என்று சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்கள் தவறானவை. இது கடந்த 2020-ல் அஸ்ஸாம் ஸ்டேடியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதையும் அறிய முடிகிறது.