இந்து எனக் கூறி லவ் ஜிகாத் செய்ய முயன்ற முஸ்லீம் இளைஞர்களுக்கு போலீஸ் தடியடி எனப் பரவும் பொய் !

பரவிய செய்தி
குஜராத்தில் வசதியான இந்து பெண்களை திட்டமிட்டு தான் இந்து பையன் என்று சொல்லி காதல் செய்ய தூண்டியவனுக்கு உடனடி தண்டனை..
மதிப்பீடு
விளக்கம்
குஜராத்தில் இந்து எனக் கூறி வசதியான இந்து பெண்களை ஏமாற்ற முயன்ற முஸ்லீம் இளைஞர்களுக்கு காவலர்கள் தக்க தண்டனை கொடுப்பதாகக் கூறி இளைஞர்கள் இருவர் மீது காவலர்கள் தடியடி நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வருகிறது.
குஜராத்தில் வசதியான இந்து பெண்களை திட்டமிட்டு தான் இந்து பையன் என்று சொல்லி காதல் செய்ய தூண்டிய டுபுக்கனுக்கு உடனடி தண்டனை … டுபுக்கனுக்கு சொம்பு தூக்கற பயல்கள் எல்லாம் மனித உரிமை கமிஷனுக்கு போங்கடா .. 😂😂😂 pic.twitter.com/HAyr6Hcqf7
— Thirunavukkarasu.s (@Thiruna84952891) July 27, 2023
அந்த வீடியோவில் காவலர்கள் இரண்டு இளைஞர்கள் மீது நடுரோட்டில் வைத்து தடியடி நடத்துவதை பார்க்க முடிகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ Maninagar accident என்னும் ஹாஷ்டேக் உடன் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதை காண முடிந்தது.
இதுகுறித்து, Gujarat First என்னும் ஊடகமும் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை கடந்த ஜூலை 25 அன்று பதிவிட்டுள்ளது. அப்பதிவில், “அருமை.. மணிநகர் காவலர்கள் இதன் உண்மையான சம்பவத்திற்கு ஏன் இத்தகைய அடியைக் கொடுக்க வில்லை?” என்று குஜராத்தி மொழியில் குறிப்பிட்டிருந்தனர்.
#AhmedabadAccident | શાબાશ..મણિનગર પોલીસ
આવા ફટકા તથ્યને કેમ નહિ ? #AhmedabadAccident #IsconBridgeAccident #CarAccident #TathyaPatel #PragneshPatel #maninagar #SGHighway #TragicDeath #JaguarCar #gujaratfirst @GujaratPolice @dgpgujarat @VikasSahayIPS @AhmedabadPolice pic.twitter.com/lxk6SiFVGF— Gujarat First (@GujaratFirst) July 25, 2023
எனவே இந்த மணிநகர் சம்பவங்கள் குறித்து தேடியதில், இதுகுறித்து Satyaday என்ற குஜராத்திய ஊடகம் கடந்த ஜூலை 26 அன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் பாலத்தில் தத்யா படேல் என்ற இளைஞர் தனது ஜாகுவார் காரை மோதி 9 பேரின் உயிரை பறித்த நிலையில், தற்போது இவரைப் போன்றே அலட்சியமாக காரை ஓட்டி வந்த வந்தேல் இஸ்மோ என்ற நபர் மீது போலீசார் தற்போது தடியடி நடத்தி கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதே போன்று அகமதாபாத் மணிநகர் பகுதியில் கேதார் டேவ் என்ற இளைஞர் விபத்துக்குள்ளாகினார். கேதார் டேவ் காரை மதுபோதையில் முழு வேகத்தில் ஓட்டிச் சென்றதால், மரத்தின் மீது மோதி கார் கவிழ்ந்தது. எனவே மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூலை 26 அன்று MIRROR NOW என்ற ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவை “வைரல் வீடியோ: பொது இடத்தில் அகமதாபாத் போலீசார் தடியடி | லத்தியால் கொடூரமாக அடித்தனர் | குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கு” என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளது.
முடிவு: