குஜராத் அரசு நிகழ்ச்சியில் காலி இருக்கைகளை நோக்கி பிரதமர் மோடி பேசினாரா ?

பரவிய செய்தி

குஜராத் தேர்தல் பேரணியில் காலி சேர்கள்..

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் விதமாகப் பிரதமர் மோடி அம்மாநில மக்களைச் சந்திக்கப் பல முறை குஜராத் சென்று வருகிறார்.

2022 அக்டோபர் 9ம் தேதி குஜராத் மாநிலம் மெக்ஸனா(Mehsana) மாவட்டத்தில் உள்ள மோதேரா(Modhera) எனும் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டில் சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் கிராமம் என மோதேரா கிராமத்தை அறிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மோடி பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோவை பகிர்ந்து, மோடியின் கூட்டத்தில் மக்கள் கலந்துக்கொள்ளவில்லை எனவும், காலி இருக்கைகளை நோக்கி மோடி பேசியுள்ளார் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

வைரலான வீடியோ குறித்து இணையத்தில் தேடியபொழுது பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடுயூப் பக்கத்தில் 2022ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இந்நிகழ்வின் முழு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வீடியோவின் 1.20வது நிமிடத்தில் ஆடிட்டோரியும் முழுக்க மக்கள் நிறைந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. மேலும், 36வது நிமிடத்தில் அனைத்து இருக்கைகளிலும் மக்கள் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. 58நிமிட நீளம் உள்ள அந்த வீடியோவில் பல்வேறு இடங்களில் மக்கள் அரங்கம் முழுதும் நிறைந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. எந்த இருக்கையும் காலியாக இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

இதிலிருந்து, காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளால் பரப்பப்படும் வீடியோ இந்நிகழ்வு முடிந்தப் பிறகு எடுக்கப்பட்டது என நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும், கூட்டம் முடிந்த பிறகு மக்கள் எழுந்து செல்லும் வீடியோவை தவறாகப் பரப்பியுள்ளனர் எனத் தெரியவருகிறது.

Twitter link 

முடிவு :

நம் தேடலில், குஜராத்தில் காலியான இருக்கைகளை நோக்கி பிரதமர் மோடி பேசியுள்ளார் என வைரலான வீடியோ தவறானது. அது நிகழ்வு முடிந்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோவை  தவறாகப் பரப்பியுள்ளனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader