2002 குஜராத் கலவரத்தின் அடையாளங்கள் மதநல்லிணக்கத்துடன் நட்பான நிகழ்வு !

பரவிய செய்தி

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டு கை எடுத்து கலங்கிய கண்களோடு சிதைந்து போய் நின்ற குதுபுத்தீன் அன்சாரியை யாரும் மறந்து விடவில்லை. அதே கலவரத்தில் மதவெறி ஊட்டப்பட்டு கொலை வெறியில் கைகளில் கத்தியும், தலையில் காவித் துணியுமாக நின்ற அசோக் பார்மரையும் மறந்து விடவில்லை.

இத்தனை ஆண்டுகாலம் கழிந்து வாழ்க்கையின் பல நிலைகளையும் கடந்து இன்று இவர்கள் இருவரும் எந்த மதவெறி அவர்களை பிரித்ததோ அதற்கு எதிராக பேச வந்து நிற்கிறார்கள். அசோக்கின் புதிய செருப்பு கடையை திறந்து வைக்க வந்து இருப்பது, அன்சாரி. மத வெறி எதையுமே தரவில்லை இழப்பை தவிர என்கிறார்கள்…அசோக் மற்றும் அன்சாரி இருவரும் ஒரு குரலாக.

மதிப்பீடு

விளக்கம்

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் உடலில் இரத்த காயங்கள் இருக்க கண்ணில் கண்ணீர் உடன் கையெடுத்து கும்பிடும் நபர் ஒருபுறம், பின்னே நெருப்பு எரிந்து கொண்டிருக்கையில் தலையில் காவித் துணியைக் கட்டிக் கொண்டு கையில் இரும்பு கம்பியை மேலே உயர்த்தி கத்தும் நபரின் மற்றோரு புகைப்படம் ஆகிய இரு புகைப்படங்களும் குஜராத் கலவரத்தின் மிகப்பெரிய அடையாளமாகக் கருதப்பட்டன.

Advertisement

கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபராக காண்பிக்கப்பட்டவரின் பெயர் குதுபுத்தீன் அன்சாரி, கலவர வெறியுடன் இருந்த நபரின் பெயர் அசோக் பார்மர். அவ்விரு முகங்களும் 17 ஆண்டுகள் கழித்து ஊடகங்களில் மதநல்லிணத்திற்கு அடையாளமாக வெளியாகி வருவதை பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

கலவரத்தில் ஈடுபடுவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை அனைத்தையும் புரிய வைத்திருக்கிறது. 45 வயதான அசோக் பார்மர் தன்னுடைய வாழ்க்கையில் 25 வருடங்களாக Delhi Darwaza பகுதி அருகே உள்ள நடைபாதையில் ஷூக்களை பழுது செய்யும் கடையை நடத்தி வந்திருக்கிறார். அன்சாரி அகமதாபாத் பகுதியில் டைலரிங் தொழிலை கவனித்துக் கொண்டு தன் மனைவி, குழந்தைகள் உடன் நன்றாக வாழ்ந்து வருகிறார்.

2014-ல் மத நல்லிணக்கம் தொடர்பான நிகழ்ந்த நிகழ்ச்சியில் இருந்து இருவருக்கும் இடையே நட்பு உருவாகியது. இன்று அசோக் பார்மர் அகமதாபாத் பகுதியில் ” Ekta Chappal Ghar ” எனும் பெயரில் காலணி கடை ஒன்றை திறந்து உள்ளார். அந்த கடை திறப்பு விழாவில் குதுபுத்தீன் அன்சாரி சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

” அசோக்பாய் உடைய வாழ்வில் புதிய அத்யாயம் தொடங்கி இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ” என அன்சாரி தெரிவித்து இருக்கிறார். ” ஏக்தா அல்லது ஒற்றுமை மட்டும் முன்னேறுவதற்கான வழி ” என பார்மர் கூறியுள்ளார். இவ்விருவரும் 2002 கலவரத்தை மறப்பதே சிறந்தது என நினைக்கின்றனர்.

Advertisement

17 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவரும், கலவரம் செய்தவரும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையில் அதனை மறந்து நட்புடன் இருப்பது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. மதவெறி என்றும் தீர்வாகாது, அதனால் எதுவும் கிடைக்கப்போவதும் இல்லை இழப்புகளை தவிர…

பாதிக்கப்படுபவருக்கும், பாதிப்பை ஏற்படுத்தும் நபருக்கும் இழப்பு என்பது நிச்சயம் இருக்கும். அதனை அவர்கள் புரிந்து கொள்ள காலம் தேவைப்படும். வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் நம் தேசத்தில் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதையே அன்சாரி மற்றும் பார்மர் வாழ்க்கை எடுத்துரைக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close