குஜராத்தில் திருமண அழைப்பிதழில் வைத்து பாஜகவினர் போதைப் பொருள் கடத்தினார்களா ?

பரவிய செய்தி

குஜராத்தில் திருமண அழைப்பிதழ்களில் வைத்து போதைப்பொருள் கடத்தும் பாஜகவினர்

Archive Link

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்தில் பாஜகவினர் திருமண அழைப்பிதழில் வைத்து போதைப் பொருள் கடத்துவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Facebook Link

உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ குறித்து இணையத்தில் தேடியபோது, 2020 பிப்ரவரி 23ம் தேதி “Wedding cards more expensive than Ambani’s? How Rs 5 crore worth drugs were hidden” எனும் தலைப்பில் தி நியூஸ்மினிட் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

“கர்நாடகா மாநிலம் பெங்களூரின் கேம்பேகௌடா (Kempegowda) விமான நிலையத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுள்ள பத்திரிகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பத்திரிகைகளில் 5 கிலோவுக்கு மேல் தடை செய்யப்பட்ட Ephedrine drug எடுக்கப்பட்டது” எனப் பதிவிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் தற்பொழுது குஜராத்தில் நடந்தது எனப் பரப்பப்படும் வைரல் வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

Article Link

2020ல் ஊடகவியலாளர் ஸ்னேகிஷ் அலிஸ் பில்லிப்(Snehish Alex Phillip) தனது ட்விட்டர் பக்கத்தில் பெங்களூரு ஏர்போர்டில் பறிமுதல் செய்யப்பட்ட 5kg போதைப்பொருள் குறித்து இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

மேலும், 2020 பிப்ரவரியில் Drugs Worth Over ₹ 5 Crore, Hidden In Wedding Cards, Seized At Bengaluru Airport எனும் தலைப்பில் NDTV  வெளியிட்ட செய்தியில், ” இந்த பார்சல் மதுரையை மையமாகக் கொண்ட ஏற்றுமதியாளர் பதிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் ” எனக் குறிப்பிட்டு உள்ளது.

Article Link

டைம்ஸ் ஆப் இந்தியா Bengaluru: Drugs worth Rs 5 crore stashed in 43 invitation cards for fake wedding எனும் தலைப்பில் வெளியிட்ட செய்தியில், பெங்களூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போதைப் பொருள் கடத்தப்பட்டபோது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது என இந்த புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

Article Link

இதிலிருந்து குஜராத் மாநிலத்தில் திருமண பத்திரிகையில் வைத்து போதை பொருள் கடத்துவதாகப் பரவும் வீடியோ 2020 பிப்ரவரியில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கேம்பேகௌடா (Kempegowda) விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டபோது எடுத்தது எனத் தெரிய வருகிறது.

முடிவு :

நம் தேடலில், குஜராத்தில் திருமண அழைப்பிதழ்களில் வைத்து போதைப்பொருள் கடத்தும் பாஜகவினர் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ தவறானது. அந்த வீடியோ 2020ல் பெங்களூரில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருள் கடத்த முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader