குஜராத்தில் இந்துகளின் குடியிருப்புகளை விற்குமாறு முஸ்லீம்கள் கும்பல் மிரட்டியதாக வதந்தி !

பரவிய செய்தி
சில நாட்களுக்கு முன்பாக, பாவ்நகரில் உள்ள சாத்விக் சோசைட்டியில் சுமார் 15 அடுக்குமாடி குடியுயறுப்புகளில் வசித்த இந்துக்களை தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்று விடுங்கள் அல்லது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என 100-150 பேர் கொண்ட முஸ்லீம்கள் கும்பல் மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இந்துகளிடம் குடியிருப்புகளை விற்குமாறு முஸ்லீம்கள் கும்பல் ஒன்று மிரட்டியதாக OPindia, deshgujarat உள்ளிட்ட சில இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டன. அந்த செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
‘Sell or face consequences, we know what you do’ – Hindus in Bhavnagar threatened by Muslim mob to leave, reports suggest. Now where have we heard it before? https://t.co/FeX6s3sw8o
— Nirwa Mehta (@nirwamehta) March 16, 2022
#BhavnagarExodus in making..@PMOIndia Please take action. https://t.co/lHdnzptFvS
— We Are One (WAO) #JusticeForLavanya (@JustBeing007) March 19, 2022
உண்மை என்ன ?
இதுகுறித்து தேடிப் பார்க்கையில், பாவ்நகர் காவல்துறை உடைய ட்விட்டர் பக்கத்தில் , தினசரி செய்தித்தாள் ஒன்று பாவ்நகரில் உள்ள குடியிருப்புகளை விற்கும்படி முஸ்லிம்களின் கும்பலால் இந்துகள் மிரட்டப்பட்டதாக வெளியிட்டது. நகரில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. போலீசார் சட்டப்படி விசாரணை நடத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது ” எனப் பதிவிட்டு உள்ளனர்.
A daily news paper has published article about ‘Hindu Residents being threatened by mob of Muslims to sell their flats in Bhavnagar’. No such incident has taken place in city. Police has initiated a legal inquiry and notice has been issued.@sanghaviharsh @dgpgujarat @akumarips pic.twitter.com/1CtIPaKDNx
— Bhavnagar Police (@SPBhavnagar) March 16, 2022
மேலும், ” இது போலிச் செய்தி ” என குஜராத் மாநிலத்தின் டிஜிபி உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளனர்.
A case of fake news. https://t.co/DAq4hhaf0M
— DGP Gujarat (@dgpgujarat) March 16, 2022
இதுகுறித்து குஜராத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, ” பாவ்நகரில் உள்ள இந்துக்கள் தங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்கும்படி முஸ்லீம்கள் கும்பலால் மிரட்டப்படுகிறார்கள் என்பதை பற்றி நானும் படித்து இருந்தேன். நகரில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. போலீசார் சட்டப்படி விசாரணை நடத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தயவுசெய்து பொய்யான செய்திகளை வைரல் செய்யாதீர்கள் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Respected friends I have read about ‘Hindu Residents being threatened by mob of Muslims to sell their flats in Bhavnagar’. No such incident has taken place in city. Police has initiated a legal inquiry and notice has been issued.
Kindly don’t viral fake news. https://t.co/Oeq1tS7Fe5— Harsh Sanghavi (@sanghaviharsh) March 16, 2022
அப்படியோரு சம்பவம் நடக்கவில்லை என பாவ்நகர் காவல்துறை தொடங்கி மாநிலத்தின் அமைச்சர் வரை மறுத்து விளக்கம் அளித்த பிறகும் கூட அந்த வதந்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தவறான செய்தியை வெளியிட்ட இணையதளங்கள், பதிவை நீக்காமல் செய்தியின் உள்ளே இறுதியாக காவல்துறை மறுத்த செய்தியை இணைத்து உள்ளனர். ஆகையால், இந்த வதந்தி தொடர்ந்து பரவி வருகிறது.
முடிவு :
நம் தேடலில், குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் பகுதியில் இந்துகளின் குடியிருப்புகளை விற்கும்படி முஸ்லீம் கும்பல் மிரட்டியதாக பரவும் செய்தி வதந்தி என அறிய முடிகிறது.