This article is from Mar 04, 2022

இம்ரான் கான் பற்றி புதின் பேசுவதாக போலி வீடியோவை பதிவிட்ட துக்ளக் குருமூர்த்தி !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில் துக்ளக் குருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில், ” புதின் எப்படி இம்ரான் கானை புறம்தள்ளினார் என்பதை அவசியம் பார்க்க வேண்டிய காணொளி. தீவிரமானது, நகைச்சுவையாக இருக்கிறது ” என ரஷ்யாவின் அதிபர் புதின் பேசும் 29 நொடிகள் கொண்ட வைரல் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் புதின் பேசுவதற்கு கீழே வரும் சப்-டைட்டிலில், ” UNSC-ல் எனது உரையின் போது கில்கித்-பல்திஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நான் தெளிவுப்படுத்தினேன். கில்கித்தை ஒரு தற்காலிக மாகாணமாக உருவாக்கும் பாகிஸ்தானின் முயற்சியை ரஷ்யா ஆதரிக்கவில்லை. இந்த விவகாரத்தில் என்னை சமாதானப்படுத்த பிரதமர் இம்ரான் கான் மாஸ்கோவிற்கு வந்தார் ” என புதின் தொடர்ந்து பேசுவது இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ?

ரஷ்யாவின் அதிபர் புதின் ஐரோப்பிய நாடுகளை பொய்களின் பேரரசு என அழைத்தது உலக அளவில் செய்திகள் பலவற்றில் வெளியாகியது. வைரலாகும் புதின் பேசும் அதே வீடியோவை பிப்ரவரி 28-ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த ரஷ்யா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது. ஆனால், புதின் கில்கித்-பல்திஸ்தான் பற்றி ஏதும் பேசவில்லை என சப்-டைட்டில் மூலம் அறிய முடிகிறது

துக்ளக் குருமூர்த்தி பதிவிட்ட வீடியோ வைரலாகியதால், ” இதை பலர் தீவிரமாக எடுத்துக் கொண்டனர். இது வேடிக்கையானது ” எனக் கூறி தன்னுடைய பழைய ட்விட்டை பகிர்ந்து இருக்கிறார்.

Twitter link | Archive link

முடிவு : 

நம் தேடலில், ரஷ்யாவின் அதிபர் புதின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் கில்கித் -பல்திஸ்தான் பிரச்சனை குறித்து பேசியதாக துக்ளக் குருமூர்த்தி பதிவிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader