ஞானவாபி மசூதி கிணற்றில் கிடைத்த சிவலிங்கம் எனப் பரவும் தவறான படம் !

பரவிய செய்தி
300 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில் கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய கிணற்றின் நீரை இறைத்து வெளியேற்றிய போது 12.8 அடி உயரமுள்ள சிவலிங்கம்.
மதிப்பீடு
விளக்கம்
300 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் கிணற்றின் நீரை இறைத்து வெளியேற்றிய பிறகு 12 அடி உயரமுள்ள சிவலிங்கம் கிடைத்துள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
16-ம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து முகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : காசி விஸ்வநாத் கோயில் – ஞான்வாபி மசூதி விவகாரம் நடந்தது , நடப்பது என்ன ?
வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்தது. சமீபத்தில் ஞானவாபி மசூதியில் நடைபெற்ற ஆய்வில் வளாகத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக ஹரிசங்கர் ஜெயின் எனும் வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, மசூதி வளாகத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று(ஃபவுண்டைன்) என ஞானவாபி மசூதி நிர்வாகம் தரப்பில் தெரிக்கப்பட்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவிற்கு, அந்த பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொழுகைக்கு தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து, ஞானவாபி மசூதியின் வளாகத்தில் உள்ள குளத்தை தூய்மைப்படுத்தும் போது கிணற்றுக்குள் சிவலிங்கம் இருப்பதாக பழைய வீடியோ ஒன்று செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. எனினும், இது தொடர்பான ஆய்வுகளுக்கு பிறகே முழுமையான தகவல் வெளியாகும்.