உயர் நீதிமன்றத்திற்கே அதிகாரம் இல்லை என்றாரா ஹெச்.ராஜா ?

பரவிய செய்தி

என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இல்லை- ஹெச்.ராஜா

மதிப்பீடு

சுருக்கம்

தாமாக முன்வந்து வழக்கு தொடர உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஹெச்.ராஜா தரப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது

விளக்கம்

நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அவதூறாக பேசிய விவகாரத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அத்தருணத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான சி.டி.செல்வம் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் அமர்வு தாமாக முன்வந்து(suo motu) ஹெச்.ராஜா விவகாரத்தை விசாரிப்பதாக தெரிவித்தனர். ஆதலால், ஹெச்.ராஜா 4 வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement

நீதிமன்றத்தைப் பற்றி தவறான கருத்துக்கள் கூறியதற்காக விளக்கமளிப்பது தொடர்பான நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. தன்னை தாமாக முன்வந்து விளக்கமளிப்பது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

அதாவது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் மட்டுமே தாமாக முன்வந்து(suo motu) வழக்கு தொடர முடியும் என்ற முறையீட்டை முன்வைத்துள்ளார்.  ஹெச்.ராஜாவின் முறையீடு அவரின் மூத்த வழக்கறிஞர் மூலம் தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.

சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை என்ற ஹெச்.ராஜாவின் கருத்தானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தன்னை ஆஜராக உயர் நீதிமன்றத்திற்கே அதிகாரம் இல்லை என்று கூறியதாக செய்திகள் இணைக்கப்பட்டு பரவி வருகிறது.

” ஹெச்.ராஜாவின் கூற்றில் உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது “.

Advertisement

எனினும், மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை ஹெச்.ராஜா அவமதிப்பதாக கூறுகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்..!

எதுவாகினும், நீதிமன்றம் மற்றும் காவல் துறை குறித்து கோபமாக அவதூறு கருத்துக்கள் பேசிய ஹெச்.ராஜா மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ? அல்லது சாமானியனுக்கு ஒரு சட்டம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் என்னும் நிலை வெளிப்படுமா ? என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close