எச்சில் துப்புவதே ஹலால் உணவு முறை என தமிழ்நாடு நீதிமன்றம் கூறியதாகப் பரவும் வதந்தி!

பரவிய செய்தி
இஸ்லாம் மதத்தின்படி, உணவை ஒரு முஸ்லீம் தயாரித்திருக்க வேண்டும். மேலும் அதில் எச்சில் துப்பியிருக்க பட வேண்டும். அப்போது தான் அந்த உணவை ஹலால் ஆக்க முடியும் என்று தமிழ்நாடு நீதிமன்றம் கூறியுள்ளது. முடிவுகள் எடுக்கப்படவேண்டும் – அவர்கள் அதை எடுத்துக்கொண்டார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் ஹலால் உணவு குறித்து தமிழ்நாடு நீதிமன்றம் கூறியதாகக் கூறி பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. குறிப்பாக அதில், “இஸ்லாம் மதத்தின்படி, உணவை ஒரு முஸ்லீம் தான் தயாரிக்க வேண்டும். மேலும் அதில் எச்சில் துப்பியிருக்க வேண்டும். அப்போது தான் அந்த உணவை ஹலால் ஆக்க முடியும் என்று தமிழ்நாடு நீதிமன்றம் கூறியுள்ளது.” என்று குறிப்பிட்டும் சிலர் பரப்பி வருவதை காண முடிந்தது.
“बिरियानी से हिन्दुओं(जो मासाहारी हैं) का मोह भंग।”
“मुसलिम ढाबों में भीड़ घटी”जो नासमझ बाहर का खाने के शौकिन है और मुंबई के मशहूर दिल्ली दरबार में और हल्द्वानी के शमा रेस्टोरेन्ट में सालों से खाना खाते आ रहे हैं।
उन्हें अब विकल्प तलाशना होगा।तमिलनाडु में एक अदालती मामले… pic.twitter.com/ashpBllXBZ
— विकास प्रताप सिंह राठौर🚩🇮🇳 ⓀⓇⓉ (@V_P_S_Rathore) September 11, 2023
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து தேடியதில், ஹலால் உணவுகள் குறித்து தமிழ்நாடு நீதிமன்றங்களில் இருந்து எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து ஆய்வு செய்ததில், கடந்த 2021-இல் கேரளாவில், சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டுக்கு (டிடிபி) எதிராக கேரளாவில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) முன்னாள் தலைவரான எஸ் ஆர் குமார் என்பரால் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
எஸ் ஆர் குமார் இந்த வழக்குக்கு எதிரான தனது மனுவில், கோயில் பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதத்தில் கெட்டுப்போன வெல்லத்தைப் பயன்படுத்தியதாகவும், இந்து கோவிலில் நிவேத்தியம் மற்றும் பிரசாதம் ஆகியவை தயாரிக்க ஹலால் சான்றளிக்கப்பட்ட வெல்லத்தைப் பயன்படுத்தியதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பதை verdictum.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த இந்த வழக்கு குறித்த மனுவின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் அதில் “ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உமிழ்நீர் அவசியமானது என முஸ்லிம் சமூகத்தின் மத அறிஞர்கள் தங்களுடைய புனித நூல்களில் பகிரங்கமாகப் பிரகடனம் செய்து வருகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்தைகைய கருத்துகளை கேரள நீதிமன்றம் தெரிவிக்க வில்லை. மனுதாரர் தான் தன்னுடைய மனுவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே ஹலால் உணவு குறித்து தமிழ்நாடு நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகள் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
மேலும் படிக்க: திருமலா தயிரில் திடீரென ஹலால் முத்திரை எனத் தவறாகப் பரப்பப்படும் ஏற்றுமதி செய்யும் தயாரிப்பின் படம் !
இதற்கு முன்பும் ஹலால் குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாக பரவின. அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்
முடிவு:
நம் தேடலில், ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உமிழ்நீர் அவசியமானது என்று தமிழ்நாடு நீதிமன்றம் கூறியதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், கடந்த 2021-இல் கேரள நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மனுதாரர் சமர்பித்த மனுவில் தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.