மே.வங்கத்தில் ஆயுதமேந்திய சிறுவர்களின் மொகரம் ஊர்வல வீடியோவை ஹரியானாவுடன் தொடர்புப்படுத்திய கிஷோர் கே சாமி..!

பரவிய செய்தி
தமிழ்நாட்டில் எந்த ஊடகமும் இது பற்றி பேசவில்லை..
குழந்தைகள் மத்தியில் இந்த அளவு தீவிரமயமாக்கல் நடைபெறுவதற்கு பின்னால் உள்ள நோக்கம் என்ன?..!! இந்த மேவாத் தீவிரவாத தாக்குதல், கங்கா-ஜமுனா கலாச்சாரத்தின் மூலம் அமைதியை அடையத் தவறியது மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த தாயகத்தில் இந்துக்களுக்கு எதிராக செய்யும் அட்டூழியங்களின் உண்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது!!!
மதிப்பீடு
விளக்கம்
முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஹரியானாவில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் கலவரம் இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது ஹரியானாவின் நூஹ் பகுதியிலும் கடந்த ஜூலை 31 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ஊர்வலத்தின் போது இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஆறாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஹரியானா நூஹ் கலவரம் என்று கூறி இஸ்லாமிய முத்திரைக் கொண்ட கொடிகளுடன் குழந்தைகளும் இளைஞர்களும் கையில் ஆயுதங்களுடன் ஊர்வலமாக செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
What is the motto behind this level of radicalization among children?..!!
The #MewatTerrorAttack exposed truth of the so-called Ganga-Jamuni Tehzeeb, which not only failed to achieve peace but also became the subject matter of atrocities against Hindus in their own homeland !!!… pic.twitter.com/DV7FvXsRZN
— Pratheesh Viswanath (@pratheesh_Hind) August 3, 2023
@mlkhattar @Dchautala Rao Inderjit Singh What’s ur call on this
Ohh I forgot the lecture Is only for Hindus#HindusUnderAttack #Haryanaviolence #HaryanaClash #MewatTerrorAttack #MewatAttack #MewatiAntiHinduRiots pic.twitter.com/2hCpSN2bqz
— (@Digvijay_Siingh) August 2, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோவின் முழு பகுதியை மேற்கு வங்கத்தை சேர்ந்த Shaikh Aptaj Bharatiya என்பவரது முகநூல் பக்கத்தில் காண முடிந்தது.
கடந்த ஜூலை 29 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள துளியான் என்ற பகுதியில் எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் அந்த வீடியோவில் உள்ள தெருக்களை கூகுள் வரைபடங்கள் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவின் பின்னணியில் நீல நிற கோளத்தை ஏந்தியுள்ளதை போன்ற சிலையைக் காண முடிந்தது. இந்த பிஸ்வ பங்களா சின்னம் (Biswa Bangla) மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளிலிலும் அமைக்கப்பட்டிருப்பதை நம் தேடலின் முடிவில் அறிய முடிந்தது.
எனவே பரவி வரும் வீடிவோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளை கூகுள் வரைபடத்தில் தேடியதில் இந்த வீடியோ எடுக்கப்பட்ட உண்மையான இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது.
எனவே பரவி வரும் வீடிவோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளையும், கூகுள் வரைபடத்தில் உள்ள மேற்கு வங்கத்தின் துளியான் (Dhuliyan) பகுதியில் உள்ள ஹரிசபா மிலன் மந்திர் சாலையையும் ஒப்பிட்டு பார்த்ததில் அவை சரியாக பொருந்தின. இதன் மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்ட பகுதி மேற்கு வங்க மாநிலம் என உறுதிப்படுத்த முடிந்தது.
கடந்த ஜூலை 29 அன்று, துளியான் நகராட்சிக்கு அருகில், கஞ்சன் தலா உயர்நிலைப் பள்ளியில் இருந்து டக்பங்களா நோக்கி முஹரம் பண்டிகையின் போது மக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த வீடியோ அப்போது தான் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஹரியானா கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை எனப் பரவும் பொய் !
இதற்கு முன்பும், ஹரியானா கலவரத்துடன் தொடர்புப்படுத்தி பல தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தும் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: ஹரியானா வன்முறையுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரவும் 2019ல் எடுக்கப்பட்ட சூரத் வன்முறை வீடியோ !
முடிவு:
நம் தேடலில், ஹரியானாவின் நூஹ் கலவரத்தோடு தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் இவ்வீடியோ ஹரியானாவைச் சேர்ந்தது அல்ல, கடந்த ஜூலை 29 அன்று மேற்கு வங்காளத்தின் துளியான் பகுதியில் முஹரம் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.