ஹரியானாவில் வலதுசாரிகள் கூட்டத்தை விரட்டி அடித்த இராணுவம் எனப் பரவும் பீகார் வீடியோ !

பரவிய செய்தி
இது நேற்று ஹரியானாவில் நடந்தது. முஸ்லிம்கள் வீடுகளைக் காலிசெய்து போய்விடுங்கள் என மதவாத சங்கிகள் கூட்டம் கூறியது. ஆனால் முதல் முறையாக ராணுவம் தன் கடமையைச் சரியாக செய்தது.Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவின் நூஹ் பகுதியிலும் கடந்த ஜூலை 31 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது.
இந்நிலையில், ஹரியானாவில் முஸ்லீம்களின் வீடுகளைக் காலிசெய்யச் சொல்லி விரட்டும் மதவாத சங்கிகளின் கூட்டத்தை முதல் முறையாக ராணுவம் விரட்டி அடித்து தன் கடமையைச் செய்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது நேற்று ஹரியானாவில் நடந்தது. முஸ்லிம்கள் வீடுகளைக் காலிசெய்து போய்விடுங்கள் என ஒரு மதவாதக் கூட்டம் கூறியது. ராணுவம் தன் கடமையைச் செய்தது. pic.twitter.com/r22ODfHvVi
— waheedur Rahman (@xb07FFPfo7PUaWR) August 12, 2023
இது நேற்று ஹரியானாவில் நடந்தது. முஸ்லிம்கள் வீடுகளைக் காலிசெய்து போய்விடுங்கள் என ஒரு மதவாதக் கூட்டம் கூறியது. ராணுவம் தன் கடமையைச் செய்தது. pic.twitter.com/39iJVbZm5L
— Dmk Rajesh (@DmkRajesh1) August 13, 2023
அந்த வீடியோவில் பாஜகவின் கொடிகளுடன் உள்ள சிலரை காவல்துறையினர் லத்தியால் அடித்து விரட்டுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ ஹரியானா கலவரத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், NEWS9 Live கடந்த ஜூலை 13 அன்று தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஆனது 3:50 வது நிமிடத்தில் தொடங்கும் இதே வீடியோவுடன் சரியாக பொருந்துவதைக் காண முடிந்தது.
இதில் “பீகார்: ஆசிரியர் பணியிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்தினர்” என்ற தலைப்புடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 13 அன்று இந்தியா டுடே இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில், பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதை காண முடிகிறது.
பா.ஜ.கவினர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதற்கிடையில், பீகார் கல்வித்துறையானது அடுத்த வாரத்திற்கு கல்வித்துறை அதிகாரிகளின் விடுமுறைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட அலுவலர்கள் மற்றும் இதர அதிகாரிகளின் விடுமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.”
மேலும் படிக்க: மே.வங்கத்தில் ஆயுதமேந்திய சிறுவர்களின் மொகரம் ஊர்வல வீடியோவை ஹரியானாவுடன் தொடர்புப்படுத்திய கிஷோர் கே சாமி..!
மேலும் படிக்க: ஹரியானா வன்முறையுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரவும் 2019ல் எடுக்கப்பட்ட சூரத் வன்முறை வீடியோ !
முடிவு:
நம் தேடலில், ஹரியானாவில் முஸ்லிம்களின் வீடுகளைக் காலிசெய்யச் சொல்லும் வலதுசாரிகள் கூட்டத்தை ராணுவம் விரட்டி அடித்ததாகக் கூறி பரவி வரும் வீடியோ ஹரியானா கலவரத்துடன் தொடர்புடையது அல்ல. இது கடந்த ஜூலையில் பாட்னாவில் ஆசிரியர் பணியிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதி வீடியோ என்பதை அறிய முடிகிறது.