ஹத்ராஸ் விவகாரத்தில் தாக்கூர் இளைஞரின் மிரட்டல் வீடியோ| யாரை மிரட்டுகிறார் ?

பரவிய செய்தி

சிபிஜ சட்டமாவது மயிறாவது.. இங்க நாங்க வைக்கிறது தான் சட்டம்.. எங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா மேல் கொண்டு வாழ விடுவோம் னு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை போலீஸ் முண்ணிலையிலே மிரட்டும் ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி தாக்கூர் இளைஞன். இவ்வளவு தான் உ.பி.

மதிப்பீடு

விளக்கம்

ஹத்ராஸ் பெண் சம்பவம் சாதி மற்றும் அரசியல் சார்ந்த மோதலாக உருவெடுத்து வருவதை சமீபத்திய நிகழ்வுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஆதிக்கச் சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை மிரட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் வழக்கில் சாட்சி சொல்லும் பெண்ணை போலீசார் முன்னிலையில் மிரட்டுவதாக என வெவ்வேறு நிலைத்தகவல் உடன் போலீசார் சூழ்ந்து இருக்க ஒருவர் மிரட்டும் வீடியோ தமிழில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

போலீசார் சூழ்ந்து இருக்க மிரட்டும் தோணியில் பேசும் நபரின் வீடியோ குறித்து தேடிப் பார்க்கையில், ” Thakur Men’s Threats On Camera As They Defend Accused in Hathras Horror ” எனும் தலைப்பில் என்டிடிவி செய்தியில் தாக்கூர் தலைவர் ஒருவர் பீம் ஆர்மி தலைவரை மிரட்டுவதாக வைரலாகும் வீடியோ குறித்து வெளியாகி இருக்கிறது.

செய்தியில், ” பீம் ஆர்மி தலைவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிறகு உ.பி போலீசார் சந்திரசேகர ஆசாத் மற்றும் 400 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக கூடியிருந்த சுமார் 500 ஆண்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர்களில் சிலர் ஆன்லைனில் வைரலாகி வரும் வீடியோக்களில் ஆசாத்தை வெளிப்படையாக எச்சரிக்கின்றனர்.

” ராஷ்டிரிய சவர்ன் (ஆதிக்க சாதி) பரிஷத் ” கூட்டங்களை நடத்திய அக்கிராமத்தின் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆண், பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு ஆண்களுக்கு எதிராக அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் பொய்யாக குற்றம்சாட்டியுள்ளதாகக் கூறுகிறார். மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட சிபிஐ விசாரணைக்கு எதிராகவும் உள்ளனர்.

Advertisement

” சிபிஐ மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?” அவருக்கு (சந்திரசேகர்) சிபிஐ மீது நம்பிக்கை இல்லை, அரசியல் செய்யவே இங்கு வந்துள்ளார். ஒருமுறை அவரைச் சந்திப்போம், பின்னர் அவர் செய்வதை உறுதி செய்வோம்(சிபிஐ நம்புங்கள்) ” என போலீசார் சூழ அந்த நபர் கத்துகிறார்.

” அடிகளை தாங்குவதற்காக தாக்கூர்கள் பிறந்தவர்கள்.. வெளியே வாருங்கள், உங்கள் பெரிய சகோதரர்கள் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள், ” என வெளிப்படையாக பீம் ஆர்மி தலைவரை வெளியே வரச் செய்ய அவர் கத்திக் கொண்டே இருக்கிறார். அவரை காவல்துறையினர் சமாதானம் செய்ய முயற்சிப்பதைக் காணலாம் ” என வெளியாகி இருக்கிறது.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை காண சென்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக மிரட்டும் நபர்களை சுற்றி போலீசார் அமைதியாக இருப்பதாக இவ்வீடியோ வைரலாகி வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், வைரல் வீடியோவில் இருக்கும் தாக்கூர் சமூக இளைஞர் சிபிஐ-யை விமர்சிக்கவில்லை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக சாட்சி சொல்ல வந்த பெண்ணை மிரட்டுவதாக கூறும் தகவல் தவறானது.

அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காண வந்த பீம் ஆர்மி தலைவருக்கு எதிராக மிரட்டி பேசி இருக்கிறார் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button