வைரலாகும் HDFC பாஸ்புக் முத்திரையால் மக்கள் அச்சம்| வங்கி விளக்கம் !

பரவிய செய்தி
கீழே காணும் படச் செய்தியைப் பார்க்கவும், HDFC Bank தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய Pass bookல் கீழ்கண்ட செய்தியை முத்திரையிட்டு அறிவிக்கின்றது:-
“பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட எங்கள் வங்கியின் “டெபாசிட்டுகள்” அனைத்தும் Deposit Insurance Credit Guarantee Corporation of India (DICGC)ல் காப்பீடு (Insure) செய்யப்பட்டுள்து.
எங்கள் வங்கி முழுகும் நிலைக்கு வந்தால் (திவால்) உங்கள் Depositஐ திரும்ப பெற நீங்கள் கோரும் Claimக்கு – (அது Rs.1.00 லட்சத்திற்கு மேல் எவ்வளவு இருந்தாலும்) அதிகபட்சம் Rs.1.00 லட்சம் மட்டுமே DICGC உங்களுக்கு இழப்புத் தொகையாகக் கொடுக்கும்”…
அதாவது பொது மக்கள் Deposit ஆனது 5 லட்சம்/ 10 லட்சம் / ஏன் 1 கோடி ரூபாயாக இருந்தாலும் -அவர்கள் வங்கி முழுகும் பட்சத்தில் அவர்களுக்கு அதிக பட்சம்
Rs.1.00 லட்சம் மட்டுமே இழப்புத் தொகையாகக் கொடுக்கப்படும். மீதி அனைத்தும் மொத்தமாக இழப்பே ஆகும்.
மதிப்பீடு
விளக்கம்
சில நாட்களாக ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பாஸ்புக் பக்கத்தின் புகைப்படம் ஒன்று முகநூல் , ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், பாஸ்புக் பக்கத்தில் அச்சிடப்பட்ட வாசகமே.
” இந்த வங்கியின் டெபாசிடிட்டுகள் அனைத்துமே DICGC (Deposit Insurance and credit Guarantee Corporation) நிறுவனத்தின் காப்பீட்டில் உள்ளன. வங்கியில் ஏதேனும் நிதிச்சிக்கல் உண்டானால் , அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் DICGC நிறுவனமே செட்டில்மென்ட் செய்யும். நிதிச்சிக்கல் ஏற்பட்ட நாளில் இருந்து இரண்டு மாத காலத்துக்குள் ஒவ்வொரு டெபாசிட்தாரர்களுக்கும் அதிகபட்சம் ரூபாய் 1 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் ” எனத் அச்சிடப்பட்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பாஸ்புக்கில் அச்சிடப்பட்ட இத்தகைய வாசகத்தால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பிற வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களும் அச்சமடைந்து உள்ளனர்.
We’d like to clarify that the information has been inserted as per RBI circular (Link: https://t.co/nT9Wu9rNWK) dated June 22, 2017 which requires ALL Banks including Small Finance Banks and Payments Banks to “incorporate information about ‘deposit insurance cover’ (2/3)
— Neeraj Jha (@NeerajHDFCBank) October 17, 2019
இந்நிலையில், வைரலாகும் செய்திக்கு ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது . அதில்,
” டெபாசிட் இன்சூரன்ஸ் கவரேஜ் குறித்து 2017 ஜூன் 22-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அந்த சுற்றறிக்கையில் , அனைத்து வணிக வங்கிகள் , சிறிய நிதி நிறுவனங்கள் , பேமென்ட் வங்கிகள் அனைத்துமே தங்களின் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான டெபாசிட் இன்சூரன்ஸ் கவரேஜ் குறித்து பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தது. ஆர்பிஐ தெரிவித்தது போன்று, டெபாசிட்களுக்கான பாஸ்புக்கிலேயே இன்சூரன்ஸ் கவரேஜ் குறித்து அச்சிடப்பட்டுள்ளது. அப்படி அச்சிடாத பாஸ்புக்களில் மட்டுமே ரப்பர் ஸ்டாம்ப் மூலம் ஆச்சிடப்பட்டு உள்ளதாக ” விளக்கம் அளித்து உள்ளனர்.
ஒருவேளை வங்கி திவாலாகி விட்டால், ரிசர்வ் வங்கியின் முழுவதுமாக கீழ் இயங்கும் DICGC , டெபாசிட்தாரர்களுக்கு வங்கி திவாலாகிய நாளில் இருந்து இரண்டு மாதத்திற்குள் 1 லட்சம் வரையிலான தொகையை அளிப்பதை உறுதி செய்கிறது.
வங்கிகள் தங்களின் நிலுவையில் உள்ள மொத்த வைப்புத் தொகையில் 0.05%-ஐ DICGC-க்கு பிரிமீயமாக செலுத்த வேண்டும். எந்தவொரு வகைப்படுத்தலையும் பொருட்படுத்தாமல் அனைத்து வங்கிகளுக்கும் இந்த காப்பீடு பொருந்தும்.
நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா(FRDI மசோதா) , 2017 வைப்புத்தொகை காப்பீட்டை ஒழுங்குப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும். இது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
வைரலாகும் ஹெச்.டி.எஃப்.சி பாஸ்புக் பக்கத்தின் அறிவிப்பு ஆனது அந்த வங்கிக்கு மட்டுமோ அல்லது தனியார் வங்கிகளுக்கு மட்டுமே உண்டான அறிவிப்பு இல்லை. ரிசர்வ் வங்கி கடந்த 2017-ல் வெளியிட சுற்றறிக்கையின் படி DICGC காப்பீடு குறித்து வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய அறிவித்தது , அப்படி அச்சிடப்படாத வாடிக்கையாளர்கள் பாஸ்புக் பக்கங்களில் முத்திரையாக வைக்கப்பட்டு வருகிறது.
DICGC காப்பீடு குறித்து ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் விரிவான விவரங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அதை குறித்து இங்கே விரிவாக படிக்க.
வங்கிகள் திவாலாகினால் அதில் ஒருவர் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும் , வாடிக்கையாளர்களால் அதிகபட்சம் 1 லட்ச ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என்பது முன்பே உள்ள விதிமுறை. இருப்பினும் , இந்த விதிமுறை பலருக்கும் தெரியாது என்பதால் ஹெச்.டி.எஃப்.சி பாஸ்புக்கால் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
சமீபத்தில் பஞ்சாப் , மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட பிரச்சனைகளால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தை எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த சம்பவத்திற்கு அடுத்து ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பாஸ்புக் முத்திரையும் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.