This article is from Aug 01, 2018

இருதய அடைப்பிற்கு உப்பு தீர்வாகுமா ?

பரவிய செய்தி

இருதய அடைப்பு( heart attack) ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். உடனடியாக இரண்டு கல் உப்பை எடுத்து நாக்கின் அடியில் அல்லது உதட்டின் மேல் வைத்து சிறிதளவு தண்ணீர் குடித்தால் குணமடையும். மறைக்கப்பட்ட உண்மைகள். இந்த தகவலை உடனடியாக பகிரவும்.

மதிப்பீடு

சுருக்கம்

Heart attack ஏற்படும் நேரத்தில் செய்யப்படும் முதலுதவி பற்றி மருத்துவர்கள் ஆலோசனை இன்றி இணையத்தில் பரவும் தகவல்களை நம்புவது தவறான காரியம்.

விளக்கம்

Sodium chloride (NaCl) உப்பு என அனைவரும் அறிந்து இருப்போம். இதன் முக்கிய பங்கானது, சத்துகளை உறிஞ்சுவது மற்றும் கடத்துவது, இரத்த அழுத்தத்தை சரியாக வைத்துக் கொள்வது, திரவத்தின் நிலையை சமநிலையில் வைத்திருப்பது, நரம்பு சமிக்கைகளை கடத்துவது, தசைகளை தளர்த்துவது போன்றவையாகும்.

எனினும், தினந்தோறும் நாம் உண்ணும் உணவில் அதிகளவில் உப்பை சேர்த்து வந்தால் உடலின் இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இருதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் அதிகரிக்கும், உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்துவது, நீர்போக்கு போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படும்.

Heart Attack :  

இருதய அடைப்பு ஏற்படும் நேரங்களில் உகந்த முதலுதவி அளிக்கவில்லை என்றால் நோயாளிக்கு நிரந்தரமான பாதிப்புகள் அல்லது இருதய சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். உலகளவில் இருதய அடைப்பு மிகப்பெரிய நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையே. இருதய அடைப்பு ஏற்படும் நேரங்களில் முதலுதவி அல்லது மருத்துவ உதவிகளை மருத்துவமனைக்கு செல்லும் இடைப்பட்ட நேரங்களில் அளிக்க வேண்டும்.

ஒருவருக்கு திடீரென இருதய அடைப்பு ஏற்பட்டால் பதற்றப்படாமல் அவருக்கு தேவையான முதலுதவியை செய்ய வேண்டும்.

“ இருதய அடைப்பு ஏற்பட்டவருக்கு ஒரு Sorbitrate மாத்திரையை நாவிற்கு அடியில் வைக்க வேண்டும், மிகுந்த வியர்வை ( இரத்த அழுத்தம் குறைந்தால்) அதை கொடுக்க வேண்டாம். அல்லது,

குளுக்கோசை நாவிற்கு அடியில் தொடர்ந்து வைக்கலாம். ஆனால், இனிப்பான ஜூஸ் போன்றவற்றை கொடுக்க கூடாது “.

பாதிக்கப்பட்டவர் சுயநினைவை இழந்தால் CPR செய்ய வேண்டும். நெஞ்சில் கையை வைத்து உந்துவது மற்றும் வாயோடு வாய் வைத்து சுவாசம் செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் அளித்த முதலுதவி பயனளிக்கவில்லை என்றால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்வதே சிறந்தது.

இருதய அடைப்பு உயிர் சம்பந்தப்பட்ட ஆபத்தான பாதிப்பு என்பதால் நீங்களாக சிகிச்சை செய்துக் கொள்வதை தவிர்த்து இருதய சிகிச்சை வல்லுநரை அணுகுவது நல்லது.

இருதய அடைப்பு ஏற்பட்டால் உப்பை நாவிற்கு அடியில் வைத்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கூறுவது ஏற்புடையது அல்ல. மருத்துவத்துறையில் கூட உப்பு கலந்த கரைசல் பயன்படுகிறது. எனினும், மருத்துவர்களின் ஆலோசனை பெயரிலேயே அவை பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், உப்பை இருதய அடைப்புக்கு பயன்படுத்துங்கள் என்றுக் கூறுவது சரியல்ல. எந்த முதலுதவியாக இருந்தாலும் இணையத்திலோ அல்லது youtube போன்றவற்றில் பார்த்து செய்வது தவறானது. மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதே சரியான செயல்.

*Disclaimer: This information are based on available source,  we request readers to consult doctor before taking any decision and not based on this or any article in interest.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader