Heart Touching புகைப்படம்.. பின்னால் இருக்கும் கதை..!

பரவிய செய்தி
ஆண் ஒருவர் தனது இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் அவரின் இதயத்தை கையில் வைத்திருக்கும் புகைப்படம். இதற்கு பெயர் தான் இதயத்தை தொடுவதோ!
மதிப்பீடு
சுருக்கம்
தன் இதயத்தை கையில் வைத்திருக்கும் இந்த இளைஞரின் புகைப்படத்திற்கு பின்னால் ஒரு சோகம் மறைந்துள்ளது.
விளக்கம்
இதயத்தை தொடுவது என்று பலரும் கூறுவர். ஆனால், அதை செயல்படுத்தி கட்டியவர் இவராகத் தான் இருக்க வேண்டும். தன்னுடைய இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பின்பு தன்னிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயத்தை கையில் வைத்து புகைப்படம் எடுத்த அரிய நிகழ்வு என்று இந்த புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.
எனினும், ஒருவரின் இதயம் இவ்வளவு பெரிதாக இருக்காதே ? இதயம் சிவப்பு நிறத்தில் இல்லாமல் வேறு மாறி காணப்படுகிறது என்றெல்லாம் கம்மன்ட் செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த புகைப்படத்தை கேலியாக பார்க்கும் நமக்கு இதற்கு பின்னால் இருக்கும் சோகம் தெரிய வாய்ப்பில்லை.
1992 அக்டோபர் 4-ம் தேதி palm beach county-ல் பிறந்த Brandon Alexander Linkenhoker நார்த் கரோலினாவின் வாக்கே பாரஸ்ட்டை சேர்ந்தவர். 2010-ல் Wakefield high school-ல் பட்டம் பெற்றார். 19 வயதில் Brandon Alexander Linkenhoker-க்கு இதயத்தில் இருந்த பிரச்சனைக் காரணமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
” விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து இறந்த குழந்தையின் இதயம், குழந்தையின் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து, Linkenhoker இதய மாற்று அறுவைச் சிகிச்சை Duke university medical center-ல் நடைபெற்றது. இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து உயிருடன் திரும்பினார் Linkenhoker மற்றும் நான்கு மாத முறையீடுக்கு பின்னர் மருத்துவர்கள் Linkenhoker தன் இதயத்தைப் பார்க்க அனுமதித்தனர் ” என்று இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.
கையில் இதயத்துடன் இருக்கும் தன் மகனின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இளைஞரின் தந்தை. ஆகையால், இந்த புகைப்படங்கள் உலகளவில் அதிகம் வைரளாகி உள்ளது.
எனினும், எதிர்பாராமல் Linkenhoker ஆல் இதய மாற்று சிகிச்சைக்கு பின் வாழ்வது சாத்தியமற்றதாகியது. அறுவை சிகிச்சைக்கு பின் இரண்டு மாதங்களில் 19 வயதான Linkenhoker ஜூலை 2012-ல் Duke university medical center-ல் உயிரிழந்தார்.
இரண்டாம் முறை உயிர் பெற்று வந்த Linkenhoker-ன் இதயத்தால் கால நொடிகளை கடக்க முடியவில்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.