ஹெலிகாப்டர், ட்ரக் மோதிக்கொள்ளும் வைரல் வீடியோ| எங்கு நிகழ்ந்தது ?

பரவிய செய்தி
பஞ்சாப் அமிர்தசரஸில் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரக் மோதி விபத்து
மதிப்பீடு
விளக்கம்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் சாலையின் அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் றெக்கைகளில் ட்ரக் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக இந்திய அளவில் சமூக வலைதளங்களில் இவ்வீடியோ வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ எங்கு நிகழ்ந்தது எனத் தேடிப் பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வைரலாக வீடியோவின் லிங்கை வைத்து Fake news debunker by InVID &Weverify மூலம் கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2020 ஜனவரி 25-ம் தேதியே இவ்வீடியோ தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்துள்ளது. ஆனால், அப்பதிவுகளில் இந்தியாவில் நிகழ்ந்ததாக குறிப்பிடவில்லை.
சோனமுத்தா போச்சா… 🤣🤣🤣 pic.twitter.com/N7hwGUuqbu
— ஆஹான்!! 😉 (@Kadhar_Twitz) January 26, 2020
Advertisement
மேற்கொண்டு தேடுகையில், 2020 ஜனவரி 21-ம் தேதி டெய்லி மெயில் இணையதளத்தில், பிரேசில் நாட்டின் ரியோ ப்ரான்க்கோ நகரில் சாலையில் இருந்த ஹெலிகாப்டருடன் மருத்துவ கழிவுகளுடன் சென்றுக் கொண்டிருந்த ட்ரக் மோதியதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ உடன் வெளியாகி இருக்கிறது.
ஜனவரி 19-ம் தேதி RC Channel எனும் யூடியூப் சேனலில் ஹெலிகாப்டர், ட்ரக் விபத்தின் 1.46 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது. பிரேசிலில் நிகழ்ந்த விபத்தை இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் நிகழ்ந்ததாக கிண்டல், கேலியுடன் தவறாக வைரல் செய்து வருகிறார்கள்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.