ஹை வோல்டேஜ் பவர் லைன்களின் அருகே லைட் டியூப்கள் தானாக ஒளிருமா ?

பரவிய செய்தி
400kv ஹை வோல்டேஜ் பவர் லைன் கீழே இஎம்எப் காரணமாக டியூப்லைட் மற்றும் டெஸ்டர் ஒளிர்கிறது.
மதிப்பீடு
சுருக்கம்
ஹை வோல்டேஜ் பவர் லைன்களின் கீழே டியூப்லைட் வைத்து இருந்தால் ஒளிர்வதை பார்க்க முடியும். அங்கு இருக்கும் எலெக்ட்ரிக் மெக்னட்டிக் ஃபில்டு காரணமாக ஒளிர்கின்றன.
விளக்கம்
கிராம மக்கள் மின்சாரம் செல்லும் பாதையான ஹை வோல்டேஜ் பவர் லைன்களின் கீழே கையில் டியூப்லைட்கள் மற்றும் டெஸ்டர்கள் வைத்துக் கொண்டு நிற்கும் பொழுது அவை ஒளிர்வதை பார்க்க முடிந்து. இது உண்மையா? எப்படி நிகழ்கிறது ? என்ற கேள்விக்கு கேட்கப்பட்டு இருந்தது.
நாம் உயர்ந்த மின் கோபுரங்களை பார்த்து இருப்போம். அந்த மின் கோபுரத்தின் ஹை வோல்டேஜ் பவர் லைன்கள் செல்லும் பகுதிக்கு கீழே ஒரு Fluorescent டியூப்லைட்-ஐ கையில் வைத்து இருந்தாலோ அல்லது தரையில் பொருத்தி இருந்தாலும் அவை ஒளிர்வதை பார்க்க முடியும்.
மின்சாரத்தை கடத்தும் பொழுது பவர் லைன்கள் தங்களை சுற்றி ஒரு ஆல்டர்நெட்டிவ் மெக்னடிக் ஃபில்டு-ஐ தூண்டுவதன் விளைவாக ஏற்படுகிறது. கேபிள்கள் மூலம் அதிக அளவிலான வோல்டேஜ் மின்சரம் செல்லும் பொழுது, மின்சாரத்திற்கு சமமான மெக்னடிக் ஃபில்டு அடர்த்தி போன்ற விளைவு மிக அதிகமாக இருக்கும். இந்த ஆல்டர்நெட்டிவ் மெக்னடிக் ஃபில்டு கடத்திகளுக்கு ( டியூப் ) ஒரு மின்னழுத்தத்தை தூண்டுகிறது.
அதிகப்படியான ஆல்டர்நெட்டிவ் மெக்னடிக் ஃபில்டு ஆல் டியூப்லைட்கள் மற்றும் டெஸ்டர்கள் ஒளிர்கிறது. எனினும், இது மின் இணைப்புகளில் இணைக்கப்பட்டால் வரும் பிரகாசத்தை விட குறைவான பிரகாசத்தையே தரும். எனினும், இருளில் கண்ணால் காணக்கூடிய அளவிற்கு ஒளிர்வதை பார்க்கலாம்.
பல நாடுகளில் ஹை பவர் லைன் கீழே டியூப்லைட்கள் வரிசையாக நிற்க வைத்து, கையில் பிடித்துக் கொண்டு என வித்தியாசமான புகைப்படங்களின் தொகுப்பை பார்க்க முடிந்தது. கேட்பதற்கு, பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் இந்த எலெக்ட்ரோ மெக்னடிக் ஃபில்டுகள் மூலம் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் கூறுகின்றனர்.