கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காக கோஷமிட்ட முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
ஹிஜாப் உரிமைக்காகப் போராடிய இந்தப் பெண் ‘முஸ்கான்’ நினைவிருக்கிறதா? அவர் இப்போது லண்டனில் இருக்கிறார். கர்நாடகாவில் பாஜக எதிர்ப்புக்குப் பிறகு வாழ்க்கையும் மாறிவிட்டது! அரசும் மாறிவிட்டது, அவர்கள் வேலையும் முடிந்துவிட்டது!Facebook Link
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகாவில் கடந்த 2022 பிப்ரவரியில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பல்வேறு கலவரங்கள் வெடித்தன. அப்போது மாண்டியா நகரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் முஸ்கான் கான் என்ற மாணவி ஹிஜாப் அணிந்து சென்ற போது அங்குள்ள இந்து மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கத்த ஆரம்பித்ததும், முஸ்கான் ‘அல்லாஹ்-ஹு-அக்பர்’ என்று உரத்த குரலில் கத்தும் வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகியது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக இருந்த முஸ்கான் லண்டனில் ஹிஜாப் அணியாமல் மார்டனான உடையில் இருக்கிறார், இப்போது கர்நாடகாவில் ஆட்சி மாறிவிட்டது அதனால் அவரின் வாழ்க்கையும் வசதியாக மாறிவிட்டது, அவர்கள் வேலையும் முடிந்துவிட்டது என்று கூறி பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகப் பரவி வருகிறது.
हिजाब अधिकारों की लड़ाई लड़ने वाली ये लड़की ‘मुस्कान’ याद है? वह अब लंदन में है। कर्नाटक में भाजपा के विरोध के बाद करियर और जीवन सेट! सरकार बदली, काम हुआ, टूलकिट पूरा।@MJ_007Club pic.twitter.com/JyMrsD309q
— (Sanatani) Sainidan Ratnu..Retd. Judicial Officer (@sainidan_ratnu) June 13, 2023
हिजाब अधिकारों की लड़ाई लड़ने वाली ये लड़की ‘मुस्कान’ याद है?
यह भी बताती थी कि हम इतने अमीर नही की दूसरे कॉलेज चले जाएं
वह अब लंदन में है। कर्नाटक में भाजपा के विरोध के बाद करियर और जीवन सेट!
सरकार बदली, काम हुआ, टूलकिट पूरा।#विरोधी_टूलकिट#कांग्रेस_के_षड्यंत्र pic.twitter.com/hyqfQ1L9lf— Äbhï$hëk Güptä (@mind_kracker) June 15, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இவர் கர்நாடகாவின் முஸ்கான் அல்ல என்பதையும், இந்த புகைப்படத்தில் இருப்பவர் ரேடியோ ஜாக்கியான சயீமா ரஹ்மான் என்பதையும் அறிய முடிந்தது.
London is beautiful❤️ pic.twitter.com/M3S0IUNcdh
— Sayema (@_sayema) June 6, 2023
கடந்த ஜூன் 06 அன்று “அழகான லண்டன்” என்னும் தலைப்பில் சயீமா தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் (Sayema) பரவி வரும் புகைப்படத்தோடு சேர்த்து மூன்று புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த புகைப்படத்தில் இருப்பவர் முஸ்கான் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
मुन्नी बदनाम हुई हिजाबन तेरे लिए।
वीक डेज और वीकेंड पर बुरखा गर्ल। pic.twitter.com/mkE97WtA72— ravi23 (@jaago69) February 10, 2022
இதற்கு முன்பும் கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினரான நஜ்மா நசீர் சிக்கனராலேவின் புகைப்படத்தை முஸ்கான் எனக் கூறி தவறாக பரப்பி இருந்தனர். அதேபோல், 2022ல் முஸ்கானின் புகைப்படம் என மார்பிங் செய்யப்பட்ட படத்தையும் இணைத்து வதந்தி பரப்பி இருந்தனர்.
மேலும் படிக்க: கர்நாடகாவில் அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்ட மாணவியின் புகைப்படங்கள் எனப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு :
நம் தேடலில், கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காகப் போராடிய மாணவி முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது முஸ்கான் அல்ல என்பதையும், ரேடியோ ஜாக்கியான சயீமா ரஹ்மானின் புகைப்படத்தை தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.