ஹிமா தாஸிற்கு பரிசுத் தொகையே வழங்கவில்லையா ?

பரவிய செய்தி

தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்த ஹிமா தாஸ்-க்கு மத்திய அரசு அளித்த பரிசுத் தொகை ரூ.50,000. இதுவரை அஸ்ஸாம் அரசு பரிசு ஒன்றையும் அறிவிக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக்கில் வெண்கலமும், வெள்ளிப் பதக்கமும் வென்ற சாக்சி மாலிக், பிவி சிந்து ஆகியோருக்கு அவர்களது அரியானா, ஆந்திரா மாநிலங்கள் அறிவித்த பரிசுத் தொகை 5 கோடி, 10 கோடி. மத்திய அரசும் பல கோடிகளை வழங்கியுள்ளது. பல தனியார் நிறுவனங்கள் கார் முதல் பங்களா வரை பரிசாக அளித்தனர். காரணம், முன்னவர்கள் உயர்ந்த சாதி, ஹிமா தாஸ் தாழ்த்தப்பட்டவர் என்பதினால் தான்.

மதிப்பீடு

சுருக்கம்

பி.வி . சிந்து கொடுத்த அளவு கொடுக்கவில்லை .ஆனால் ஹிமா தாஸ்-க்கு பரிசுத் தொகையும், ஒலிம்பிக் போட்டி வரை தேவையான முழு ஆதரவும் அளிக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி மகளான ஹிமா தாஸ் பின்லாந்தில் உள்ள தம்ப்ரேவில் நடைபெற்ற IAAF 20-வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

Advertisement

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி, வெண்கலம் வாங்கியவர்களுக்கு பல கோடிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளனர் என்றும், ஆனால், தங்கம் வென்ற ஹிமா தாஸ் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தினால் தான் பரிசுத் தொகை வழங்கவில்லை என்ற செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிவி சிந்து பெற்ற பரிசுகள் :

2016 RIO ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி சிந்துவிற்கு 13 கோடி அளவிற்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

  • தெலுங்கானா அரசு 5 கோடி மற்றும் 1000 சதுர அடியில் வீடுமனை மற்றும் அரசு வேலை.
  • ஆந்திரா அரசு 3 கோடி மற்றும் 1000 சதுர அடியில் வீடுமனை.
  • டெல்லி அரசு 2 கோடி.
  • ஹரியானா மற்றும் மத்தியப்பிரதேசம் அரசின் விளையாட்டுத்துறை சார்பில் Badminton association of India மூலம் தலா 50 லட்சம்.
  • பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் 75 லட்சம்.
  • கேரளா தொழிலதிபர் முக்காட்டு செபாஸ்டியன் ரூ.50 லட்சம்.
  • Indian Olympic association சார்பில் 30 லட்சம், All India football federation 5 லட்சம், நடிகர் சல்மான்கான் 1.01 லட்சம், NAC Jewellers 6 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்.
  • ஹைதராபாத் badminton association-ன் தலைவர் BMW கார் ஒன்றை வழங்கினார்.

ஹிமா தாஸ் பெற்ற பரிசுகள்:

Advertisement

 உலக ஜூனியர் தடகளப் போட்டிக்கு முன்பாக மே மாதத்தில் ஹிமா தாஸ் பின்லாந்து சென்று அங்குள்ள spala Olympic training centre-க்கு அழைத்து செல்லப்பட்டார். அதற்கு அரசு நிதியளித்தது.

ஹிமா தாஸ் CWG 2018-ல் சிறப்பான வேகத்தை வெளிப்படுத்தியதால் மே 2018-ல் அமைச்சகத்தின் TOPS Scheme அவருக்கு அளிக்கப்பட்டது.

Target Olympic podium scheme மூலம் மாதந்தோறும் ரூ.50,000 அவருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2020 டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக தேவையான உதவிகள் அனைத்தும் TOPS Scheme மூலம் வழங்கப்படும் என Sports india DG Neelam Kapoor தெரிவித்துள்ளார்.

” அஸ்ஸாம் மாநிலம் ஹிமா தாஸ்-க்கு பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்குவதாக அம்மாநில முதல்வர் சர்பானந்தா சொனோவால் அறிவித்தார். கர்நாடகா மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா அவர்கள் ஹிமா தாஸ்-க்கு ரூ.10 லட்சம் வழங்கினார் “.

hima athletics

பரிசுத் தொகை மட்டுமின்றி அஸ்ஸாம் மாநிலத்தின் sports Ambassador ஆக நியமிப்பதாக அஸ்ஸாம் முதல்வர் அறிவித்தார். ஆசியா 2018 போட்டிகளுக்கு பின் ஹிமா தாஸ் இந்தியா திரும்பிய பிறகு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி கௌரவிக்க அஸ்ஸாம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

பிவி சிந்து அளவிற்கு ஹிமா தாஸ்-க்கு பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்றாலும் அவரது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டி மட்டுமே. அதில் வென்று சாதனைப் படைக்கும் பட்சத்தில் இதைவிட அதிக பரிசுத் தொகையை பெறுவார்.

நம் நாட்டில் தான் விளையாட்டில் வெற்றி பெற்றால் இந்தியராக பார்க்காமல் சாதியத்துடனும்  ஏற்றத்தாழ்வுகளுடனும் பார்ப்பதாக பரவலாக விமர்சனம் வைக்கப்படுகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button