இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி
இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் – வினோஜ் ப செல்வம் பாஜக மாநில இளைஞரணி தலைவர்
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் இந்தி திணிப்பிறகு எதிரான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கையில் இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்து மத்தியில் ஆளும் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படி இருபக்க விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழக பாஜகவின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் என்பவர், இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் எனக் கூறியதாக நாரதர் மீடியா எனும் முகநூல் பக்கத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்பொ இவனை நாலு மிதி மிதிக்கணும்னு ஆசைபடுறான். pic.twitter.com/WVMnzBn4pP
— Savukku_Shankar (@savukku) September 8, 2020
உண்மை என்ன ?
பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வைரலாகும் கருத்து உண்மையா எனத் தெரிந்து கொள்ள நாரதர் மீடியா முகநூல் பக்கத்தில் சென்று பார்க்கையில் செப்டம்பர் 4-ம் தேதி வெளியான நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், ” இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும் ” என வினோஜ் ப செல்வம் கூறியதாக இடம்பெற்று உள்ளது. புகைப்படம், டிசைன் உள்ளிட்டவை வைரலாகும் படத்துடன் ஒத்துப்போகின்றன.
செப்டம்பர் 8-ம் தேதி வினோஜ் ப செல்வம் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் போலியான நியூஸ் கார்டு குறித்து பதிவிட்டு இருக்கிறார். ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் கார்டு சமூக வலைதளத்தில் வைரலாகி மீம்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்.
Haha @arivalayam IT wing working overtime 😂😂 pic.twitter.com/HWzqTutf9M
— Vinoj P Selvam (@VinojBJP) September 8, 2020