பாகிஸ்தானில் இந்து பெண் தாக்கப்படுவதாக வைரலாகும் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி

பாகிஸ்தானில் இந்து பெண்கள் நிலமை இதுதான்.. Hindu’s life in Pakistan

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

டிசம்பர் 2-ம் தேதி Global Video Factory என்ற முகநூல் பக்கத்தில் ” பாகிஸ்தானில் இந்து பெண்கள் நிலமை இதுதான்.. Hindu’s life in Pakistan ” என்ற வாசகத்துடன் வெளியான வீடியோவில் பெண் ஒருவர் தாக்கப்படும் காட்சி இடம்பெற்று உள்ளது. இந்த வீடியோ பாகிஸ்தான் நாட்டில் இந்து பெண்ணுக்கு நடக்கும் கொடுமை என பல முகநூல் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

பாகிஸ்தான் நாட்டில் இந்து பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என பகிரப்படும் வீடியோ தமிழில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் பல மாநிலங்களில் பரவி உள்ளது. ஆகையால், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இதற்கு பின்னால் இருக்கும் உண்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

வைரல் வீடியோவில், ” பெண் ஒருவரை வழக்கறிஞர் எட்டி உதைத்து தாக்குவதும், அப்பெண் அவர்களை திருப்பி தாக்க முயற்சிப்பதும், அதற்கிடையில் காவலர்கள் அப்பெண்ணை தடுக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. வீடியோவில் இருக்கும் காவலர்கள் மற்றும் மக்களின் உடை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்ததாக இருக்கிறது “.

இதையடுத்து வைரலாகும் வீடியோ குறித்து செய்திகளில் தேடிய பொழுது அக்டோபர் 31-ம் தேதி Gulf news இணையதள செய்தியில், பாகிஸ்தான் நாட்டில் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர் பெண் ஒருவரை எட்டி மிதிக்கும் வீடியோ வைரலாகி வருவதாக செய்தி வெளியிட்டு உள்ளனர்.

Advertisement

அதில், ” சாகர்கார்க் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தின் வெளியே இச்சம்பவம் நடந்து உள்ளது. வழக்கறிஞர்கள் ஒருவர் பின் ஒருவராக பெண்ணை தாக்கும் பொழுது அங்குள்ள காவலர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. ஜியோ டிவியின் தகவலின்படி, நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்காக வந்த அம்ராட் என்ற பெண்ணிற்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே இந்த சம்பவம் நடந்து உள்ளது என்பதை சாகர்கார்க் காவலர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஷாஹ்பூர் பாங்குக் பகுதியை சேர்ந்த அம்ராட் (வீடியோவில் இருக்கும் பெண்), தன்னிடம் வழக்கறிஞர்கள் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் அப்பெண் தான் தங்களை தாக்கியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்து இருந்ததாக ” வெளியாகி இருக்கிறது.

Twitter link | archived link 

அக்டோபர் 30-ம் தேதி, ட்விட்டர் வாசி ஒருவர் வைரலாகும் வீடியோ குறித்து வெளியான செய்தியை பதிவிட்டு உள்ளார். இதேபோல், Samaa tv என்ற இணையதளத்தில் வெளியான செய்தியில், ” அந்த பெண் அம்ராட் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தனது உறவினர் அப்துல் கயோம் என்பவருடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார் ” என இடம்பெற்று உள்ளது.

பாகிஸ்தானில் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட பெண்ணின் பெயர் Amrat Shahzadi doqtor மற்றும் அவர் ஒரு இஸ்லாமிய பெண். நீதிமன்றத்திற்கு வெளியே பெண் தாக்கப்பட்ட வைரல் வீடியோ இந்திய செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, பாகிஸ்தான் நாட்டில் இந்து பெண் தாக்கப்படுவதாக கூறி வைரலாகும் வீடியோ தவறானவை. அப்பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அவரின் பெயர் மற்றும் அவரின் உறவினர் பெயரில் இருந்து அறியலாம்.

மேலும், வீடியோவின் இறுதியில் முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா போன்ற ஆடையை அப்பெண்ணின் தலையில் ஒருவர் வைக்கிறார்.

இந்த வீடியோ, அக்டோபர் 2019-லேயே பாகிஸ்தான் நீதிமன்றத்திற்கு வெளியே பெண் ஒருவர் வழக்கறிஞர்கள் மூலம் தாக்கப்பட்டதாக வைரலாகி இந்திய செய்திகளிலும் கூட வெளியாகி இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button