This article is from Sep 26, 2019

தமிழை ஒழித்திடக் கூறி இந்து முன்னணி போராட்டம் நடத்தியதா ?

பரவிய செய்தி

ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு.. புகுத்திடு புகுத்திடு இந்தி, சமற்கிருதம் புகுத்திடு – இந்து முன்னணி.

 

மதிப்பீடு

விளக்கம்

மிழக இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தமிழ் மொழிக்கு எதிரான பேனர்கள் இருப்பதாக காண்பிக்கப்படும் புகைப்படம் பல ஆண்டுகளாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

” ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு.. புகுத்திடு புகுத்திடு இந்தி, சமற்கிருதம் புகுத்திடு ” என்ற வாசகம் இடம்பெற்ற பேனர்களை சுமந்து இருக்கும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த புகைப்படங்கள் 2016-ல் இருந்து தற்பொழுது வரை பரவி வருகிறது என அறிய முடிந்தது.

உண்மை என்ன ? 

இந்து முன்னணி அமைப்பினர் தமிழ் மொழிக்கு எதிராகவும், இந்தி சமஸ்கிருதம் மொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக காண்பிக்கப்படும் பேனரின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம்.

முதலில் பேனரில் இடம்பெற்று இருக்கும் ” ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு.. புகுத்திடு புகுத்திடு இந்தி சமற்கிருதம் புகுத்திடு ” என்ற வாசகத்தில் சமஸ்கிருதம் என்பதற்கு பதிலாக சமற்கிருதம் என இடம்பெற்று இருக்கிறது.

இந்து முன்னணியினர் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் செய்து பார்க்கையில் ட்விட்டர் தளத்தில் இதே படங்கள் 2017-ல் பகிரப்பட்டு கண்டனம் தெரிவித்து இருந்த பொழுது அந்த பதிவில் kshatriya hindu என்ற ட்விட்டர் வாசி பரவும் புகைப்படங்கள் போட்டோஷாப் என குறிப்பிட்டு இருக்கிறார்.


Twitter link | Archived link  

மேலும், உண்மையான புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார். வேலூர் மாவட்டம் இந்து முன்னணி என்ற பேனரில் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த புகைப்படம் எங்கு பதிவாகியது, அவர்கள் நடத்திய போராட்டம் எதற்காக என்பது குறித்தும் தேடினோம்.

2015-ல் செப்டம்பர் 30-ம் தேதி ஹிந்து செய்தி இணையதளத்தில் ” 41 Hindu Munnani volunteers arrested ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

செய்தியில், ” மத்திய சிறைச் சாலையில் கைதியால்(அல் உம்மா) வார்டன் தாக்கப்பட்ட சம்பத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர். போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய காரணத்திற்காக 41 இந்து முன்னணி அமைப்பின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டதாக ” கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தமிழை ஒழித்திட இந்து முன்னணி அமைப்பினர் பேனர்களை ஏந்தி இருக்கும் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. அந்த புகைப்படம் பல ஆண்டுகளாக பரவி வருகிறது.

2015-ல் தி ஹிந்து செய்தியில் ” வேலூர் இந்து அமைப்பினர் ” நடத்திய போராட்டத்தின் உண்மையான புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader