This article is from Mar 18, 2020

மும்பையில் கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தும் நபர்கள் கையில் முத்திரை.

பரவிய செய்தி

மும்பை விமான நிலையத்தில் வாக்காளர் மையுடன் முத்திரையிடுவது தொடங்கியது. இதுபோன்ற மக்களை தெருக்களில் கண்டால், தயவு செய்து அவர்களை வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தவும்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 39-ஐ எட்டியுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் புனே உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் முதற்கொண்டு மூடப்பட்டுள்ளன நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அனுப்பப்படும் மக்களின் கைகளில் ” முத்திரை ” குத்தும் முறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.

” வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்களை இடது கையில் இடம்பெறும் முத்திரை மூலம் எளிதாக அடையாளம் காணலாம். தேர்தலில் வாக்காளர்களுக்கு வைக்கப் பயன்படுத்தப்படும் அழிக்க முடியாத மையின் மூலம் முத்திரை வைக்கப்படும். இதன் மூலம் அந்த நபர்/நோயாளி மார்ச் 31-ம் தேதி வரை கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை அடையாளப்படுத்தும் ” என அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவரின் மணிக்கட்டில் தனிமைப்படுத்தப்படும் நாள் அடங்கிய முத்திரையை வைக்குமாறு மருத்துவமனை மற்றும் விமான நிலையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் ஆணை பிறப்பித்து இருந்தார்.

மார்ச் 31-ம் தேதி வரை மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் மருத்துவர்கள் கூறும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader