பகுஜன் சமாஜ் கொடி இருந்த இடத்தில் பாஜக கொடியை எடிட் செய்து ஓசூர் என வதந்தி !

பரவிய செய்தி

In a remote village Osur in Tamil Nadu. Best picture of this week. Not only cadre based BJP. It is Ladder based Party. No Dynast तमिलनाडु के एक सुदूर गांव ओसुर में। इस हफ्ते की सबसे अच्छी तस्वीर. தமிழ்நாட்டின் ஒசூர் கிராமத்தில். இந்த வாரத்தின் சிறந்த படம்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டின் ஓசூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த வாரத்தின் சிறந்த படம் என சிலர் மின்கம்பத்தில் ஏறி பாஜக கொடியை கட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றை பாஜக ஆதரவாளர் ராஜகோபாலன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், பாஜக தலைவர் சி.டி.ரவி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Archive link 

உண்மை என்ன ? 

மின்கம்பத்தில் ஏறி கட்சி கொடியை கட்டுவது போன்ற நடவடிக்கைகள் ஆபத்தானவை, அவை கண்டிக்கத்தக்கவை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் மின்கம்பத்தில் பாஜக கொடியை கட்டுவதாக பகிரப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், உண்மையான படத்தில் நீல நிற கொடியை ஏற்றுவதை பார்க்க முடிந்தது.

Archive link

மே 31-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தெலங்கானா மாநிலத்தின் செய்தித் தொடர்பாளர் சிரிஷா ட்விட்டர் பக்கத்தில், பகுஜன் சமாஜ் கொடியை மின்கம்பத்தில் ஏற்றும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இதை அக்கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என தெளிவாக தெரியவில்லை. வாட்ஸ் அப் பதிவாக வைக்கப்பட்ட படத்தை எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் மின்கம்பத்தில் ஏற்றிய பகுஜன் சமாஜ் கட்சியின் நீல நிறக் கொடியை எடிட் செய்து பாஜக கொடியை அங்கு வைத்து சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கி உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாட்டின் ஓசூரில் மின்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றுவதாக பகிரப்படும் படத்தில் உண்மையாக பகுஜன் சமாஜ் கொடியே இருந்துள்ளது. இதன் உண்மையான படத்தை தெலங்கானா மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியினர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader