அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக வதந்தி !

பரவிய செய்தி

மத்திய சுற்றுலாத்துறை உத்தரவின்படி, 2020-ல் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் அக்டோபர் 15-ம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், ரிசார்ட்கள் மூடப்படுகிறது.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கில் குறிப்பிட்ட உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நோய்த்தொற்றின் பரவலின் காரணமாக 2019 அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், ரிசார்ட்கள், உணவகங்கள் மூடப்பட இந்திய சுற்றுலாத்துறையின் பெயரில் போலியான அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தியச் சுற்றுலாத்துறையின் தரப்பில் இருந்து ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக எந்தவொரு உத்தரவும் வெளியாகவில்லை. மேலும், ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது குறித்து இன்னும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

அடுத்ததாக, வைரலான அறிக்கையை PIB (Press Information bureau) தன் ட்விட்டர் பக்கத்தில் போலியானது என வெளியிட்டு உள்ளது.

Twitter link | archive link 

இந்திய சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் pib வெளியிட்ட ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளதை காணலாம்.

Twitter link

கோவிட்-19 நோய்த்தொற்று பரவி வரும் சூழ்நிலையில் அரசின் அறிவிப்பு என பல வதந்திகள், தவறான தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. ஆகையால், பரவும் தகவலின் நம்பகத்தன்மையை அறிந்து பகிரவும்.

Please complete the required fields.




Back to top button