வீடு மற்றும் கடைகளின் வாடகைக்கு 12% ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?

பரவிய செய்தி

வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

twitter link |Archive link

மதிப்பீடு

விளக்கம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்து உள்ளதாக தந்தி டிவி செய்தியின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி குறித்து பரவும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி சேனல் சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், ஏப்ரல் 1-ம் தேதி அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.

Twitter link | Archive link

மாறாக, ஏப்ரல் 1-ம் தேதி, ” இதுவரை இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் ₨1.42 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் ” கூறியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இச்செய்தியில் வீடு மற்றும் கடை வாடைக்கு ஜிஎஸ்டி 12% என எடிட் செய்து இருக்கிறார்கள்.

வாடகை வருமானத்திற்கு ஜிஎஸ்டி ?

2018 ஆகஸ்ட் மாதம் வெளியான தினத்தந்தி செய்தியில், ” வாடகைக்கு விடப்படும் கட்டிடங்களுக்கு அதன் வாடகை வருமானத்தில் 18% ஜிஎஸடி விதிக்கப்படும். வணிக பயன்பாட்டுக்காக கட்டிடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் ஜிஎஸ்டி கீழ் வரி கணக்கிடப்படும். ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயிற்கு குறைவாக வருமானம் பெறுவோருக்கு மற்றும் குடியிருப்புகளுக்கான வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஜிஎஸ்டி கணக்கிடப்படாது ” என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button