குடியிருப்பு பயன்பாட்டிற்கான வீட்டு வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

வீட்டு வாடகை செலுத்தும் போது 18% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவிப்பு.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

வீட்டு வாடகை செலுத்தும் போது அனைவரும் 18% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்து உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவினரும் அந்த தகவலை அதிகம் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ?

ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரையின் படி, வணிக பயன்பாட்டிற்கான வீட்டு வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. ஆனால், அது வாடகை வீட்டில் குடியிருக்கும் அனைவருக்குமானது அல்ல.

அலுவலகம் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக கட்டிடங்களின் வாடைக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது. ஆனால், இனி வீடுகளை வாடைக்கு எடுத்து வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டு இருக்கிறது.

குடியிருப்புக் கட்டிடத்தை வாடைக்கு எடுத்து தனி நபரோ அல்லது நிறுவனமோ ஜி.எஸ்.டி கீழ் பதிவு செய்து இருந்தால், வாடகை தொகைக்கு 18% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும். இது வீட்டை வாடகை எடுத்து வசித்து வரும் குடியிருப்புவாசிகளுக்கு அல்ல என அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முடிவு :

நம் தேடலில், வீட்டு வாடகை செலுத்தும் போது 18% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவிப்பு தவறாக பரவி உள்ளது. குடியிருப்பு வீட்டை வாடைக்கு எடுத்து வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கே வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடியிருப்புவாசிகளின் வீட்டு வாடகைக்கு அல்ல என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader