This article is from Jul 31, 2018

Transparent கண்ணாடியா என்பதை சோதிக்க விரல் சோதனை பயனளிக்குமா ?

பரவிய செய்தி

எச்சரிக்கைப் பதிவு..! கடைகளில் உள்ள trail room, Hotel அறையில் உள்ள கண்ணாடி சாதாரண கண்ணாடியா அல்லது வேவு பார்க்கும் transparent கண்ணாடியா என்பதை இந்த சோதனையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். கண்ணாடியில் உங்களின் விரலை வையுங்கள். • கண்ணாடியில் உங்கள் விரல் ஒட்டாவிட்டால் அது சாதாரணமான கண்ணாடி. • கண்ணாடியில் உங்கள் விரல் ஓட்டினால் அது வேவு பார்க்கும் கண்ணாடி.

மதிப்பீடு

சுருக்கம்

transparent கண்ணாடியா என்பதை சோதனை செய்ய விரலை வைத்து செய்யும் முயற்சி எல்லா நேரத்திலும் கைக் கொடுக்காது. பிற சோதனையின் மூலம் கண்ணாடி பற்றிய உண்மையை அறிய முடியும்.

விளக்கம்

பெண்கள் உடை மாற்றும் அறை, Hotel அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் பொருத்தி இருப்பது சாதாரண கண்ணாடியா அல்லது Two way கண்ணாடியா என அறிவது அவசியம். காரணம் பெண்கள் உடை மாற்றுவதை தவறாக வீடியோ எடுக்கவும், பார்க்கவும் இவ்வாறு கண்ணாடிகள் பொருத்தி வந்துள்ளனர்.

ஆகையால், பொருத்தி இருப்பது சாதாரண கண்ணாடியா என்பதை உறுதி செய்ய Fingertip test மூலம் சோதனை செய்யலாம் என்று பல வருடங்களுக்கு முன்னரே இந்த சோதனை பற்றிய செய்திகள் இணையத்தில் பரவத் தொடங்கியது.

அதில், “ கண்ணாடியில் உங்கள் விரலை வைக்கும் போது தெரியும் பிம்பத்தில் விரல் ஒட்டவில்லை என்றால் சாதாரண கண்ணாடி. ஆனால், ஒருவேளை விரல் பிம்பம் ஒட்டி விட்டால் அது Two Way mirror என்று உறுதி ஆகிவிடும். இந்த சோதனை செய்ய நேரமோ, பணமோ தேவையில்லை என்பதால் பெண்கள் அனைவரும் இந்த சோதனையை உறுதி செய்த பிறகு அந்த அறையை பயன்படுத்தவும் “ என்று கூறப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக வேவு பார்க்கும் கண்ணாடிகள் பற்றி அச்சம் இருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அதுபோன்ற கண்ணாடிகளை வீடுகளில், கார்கள் போன்றவற்றில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனினும், விரல் சோதனை பயன் அளிக்குமா என்று பார்க்கலாம்.

சில கண்ணாடி தயாரிக்கும் நிறுவனங்கள் “ Two Way mirror “ என்றும் சில நிறுவனங்கள் “ One Way mirror “ என்றும் அழைப்பதுண்டு. ஆனால், இவ்விரண்டிற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இந்த இரு பெயர்களும் “ Mirropane “ என்ற தயாரிப்பை குறிப்பிடுகிறது. இதை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் reflecting metal என்னவென்று பொதுவாக வெளிப்படையாக சொல்வதில்லை.

Fingertip Test செய்வதற்கு முன்பு அது First surface mirror அல்லது Second surface mirror என்பது பற்றி அறிய வேண்டும்.  இரண்டும் சாதாரண கண்ணாடியில் உள்ள இருவேறு வகைகள். First surface mirror அதிக விலை உடையவை மற்றும் குறிப்பாக optical instruments மற்றும் lasers போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்த First surface mirror-ல் கூட எதிரே தோன்றும் பிம்பம் தொடும்படி இருக்கும். காரணம் பிரதிபலிக்கும் கண்ணாடி பிம்பம் மேற்பரப்பின் வலப்புறத்தில் விழுவதால் தான். விலை மலிவான Second surface mirror வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவேளை First surface mirror உடை மாற்றும் அறையில் இருந்தால் அதை “ Transparent Mirror “ என்று தவறாக நினைக்க எண்ணும். மேலும், இந்த சோதனையின் போது பிம்பமானது கண்ணாடியின் அளவு, வெளிச்சத்தின் அளவு, கண்ணாடியின் கோணம், சோதனைக்கும் உட்படும் பொருள் போன்றவற்றால் வேறுபட வாய்ப்புள்ளது. அந்நேரத்தில் விரல் சோதனை சரியான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. விரல் சோதனை தவிர்த்து இன்னும் சில சோதனைகளை எளிதாக செய்து பார்க்கலாம்.

“ நீங்கள் இருக்கும் அறையின் லைட்­-ஐ Off செய்து விட்டு கண்ணாடிக்கு எதிரே அதிகம் வெளிச்சம் தரும் flash light கொண்டு பார்க்கவும். கண்ணாடிக்கு பின்னே மறைக்கப்பட்ட அறை ஏதேனும் இருந்தால் flash light ஒளிரச் செய்து விடும் மற்றும் நீங்கள் இருக்கும் அறை இருட்டாக இருந்தால் மறைந்து இருக்கும் அறையை காண முடியும் “ அல்லது,

“ கண்ணை கண்ணாடியில் பார்க்கும்படி அருகில் வைத்து இரு கைகளால் கண்களின் ஓரத்தை மறைத்து கொண்டு கூர்ந்து பார்க்கவும், கண்ணாடிக்கு பின்னே இரகசிய அறை ஏதேனும் இருந்தால் சிறு நகர்வு அல்லது சிறிய மாற்றத்தை பார்க்க முடியும் “

தொழில்நுட்ப வளர்ச்சியால் கண்ணுக்கு புலப்படாத கேமராக்களை வைத்து பெண்களை தவறாக படமெடுக்கும் நிகழ்வுகள் அதிகம் நடந்துள்ளன. ஆகையால், பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் “ Transparent mirror “ அல்லது சாதாரண கண்ணாடியா, ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது நல்லதே..!

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader