எச்.ராஜாவை தவிர மற்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனப் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
எச்.ராஜாவை தவிர எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது -அமைச்சர் கடம்பூர் ராஜு.
மதிப்பீடு
விளக்கம்
முருகன் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு போலி நியூஸ் கார்டுகள் செய்தி நிறுவனங்களின் பெயரில் வைரலாக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, எச்.ராஜாவை தவிர எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாக போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, புதியதலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் ஜூலை 21-ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை தேடிப் பார்க்கையில் அமைச்சர் கடம்பூர் ராஜு புகைப்படத்துடன் வெளியான நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது.
” எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது; மதத்தை புண்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடம்பூர் ராஜு ” கூறியதாக வெளியாகி இருக்கிறது. அதில், எச்.ராஜாவின் பெயரை வைத்து ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.