ஹெச்.ராஜா முத்துராமலிங்கத் தேவர் சிலையை வணங்கவில்லையா?| பிராமண சங்கம் நன்றி கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி

பிராமணர்களை விட தாழ்ந்த வர்ணத்தில் பிறந்த ஒருவரை வாக்கரசியலுக்காக கைக்கூப்பி வணங்காமல் பிராமண குலப் பெருமையை காத்த ஸ்ரீமான் ஹெச்.ராஜா அவர்களை  தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் மனமுவந்து பாராட்டுகிறது – தமிழ்நாடு பிராமின் சங்கம்(தாம்பிராமின்).

மதிப்பீடு

விளக்கம்

அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தமிழக பாஜக கட்சியினர் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முன்பாக வணங்கி மரியாதை செலுத்தும் போது ஹெச்.ராஜா மட்டும் வணங்கவில்லை என அவர் மலர் வளையம் வைக்கும் புகைப்படத்தை குறிப்பிட்டு தமிழ்நாடு பிராமண சங்கம் நன்றி தெரிவித்ததாக ஓர் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link 

ஒன்இந்தியா தமிழ் இணையதளம், ” முத்துராமலிங்க தேவரை கை கூப்பி வணங்காத ஹெச். ராஜா- பிராமணர் சங்கம் பெயரில் பாராட்டு போட்டோ வைரல் ” எனும் தலைப்பில் வைரலான புகைப்படம் குறித்த செய்தியை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த செய்தியை தற்போது நீக்கி உள்ளனர்.

Oneindia News link 

வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

ஹெச்.ராஜா முத்துராமலிங்கத் தேவரின் சிலையை வணங்கவில்லை எனக் கூறுவது தவறான தகவல். அவர் மலர் வளையத்தின் மீது கை வைத்திருக்கும் புகைப்படத்தைப் பயன்படுத்தி தவறாக வைரல் செய்துள்ளனர்.

தன்னைப் பற்றி வதந்தி செய்திகள் பரவுவதை அறிந்து முத்துராமலிங்கத் தேவரின் சிலையை வணங்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா பதிவிட்டு உள்ளார்.

Twitter link | Archive link 

மேலும், தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஹெச்.ராஜாவிற்கு நன்றி கூறியதாக பரவிய புகைப்படம் போலியானது என தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையையும் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர், முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link

தவறான செய்தியை வெளியிட்ட ஒன்இந்தியா தமிழ் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெச்.ராஜாவின் ட்விட்டர், முகநூல் பக்கங்களில் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து, ஒன்இந்தியா தமிழ் இணையதளமும் அந்த செய்தியை நீக்கி உள்ளது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button