“வர்ண நீதி தழைக்க நான் முதல்வராக தயார்” என ஹெச்.ராஜா கூறினாரா ?

பரவிய செய்தி
நான் முதல்வரானால்தான் தமிழ்நாட்டில் போலி சமூகநீதி ஒழிந்து இந்து வர்ண நீதி தழைக்கும் என்றால் அதற்கு நான் தயார் – ஹெச்.ராஜா
மதிப்பீடு
விளக்கம்
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் நிகழ்வதை இருகட்சியின் தலைவர்களின் கருத்துக்கள் எடுத்துரைக்கிறது.
இந்நிலையில், ” நான் முதல்வரானால்தான் தமிழ்நாட்டில் போலி சமூகநீதி ஒழிந்து இந்து வர்ண நீதி தழைக்கும் என்றால் அதற்கு நான் தயார் ” என பாஜக தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக IBC தமிழ் செய்தியின் முகநூல் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
ஹெச்.ராஜா கூறிய கருத்து எனக் கூறி வைரலாகும் நியூஸ் கார்டை வைத்து கண்டனம் தெரிவித்தும், கிண்டல் செய்தும் மீம்கள் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஹெச்.ராஜா பேசும் போது அது அனைத்து செய்திகளிலும் வெளியாகி சமூக வலைதளங்களில் கன்டென்ட் ஆக உருவெடுக்கும். ஆனால், வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ள கருத்து மற்ற செய்திகள் மட்டுமின்றி IBC தமிழ் தரப்பிலும் கூட வெளியாகவில்லை.
IBC தமிழ் முகநூலில் டிசம்பர் 27-ம் தேதி வெளியான மற்றொரு செய்தியின் கார்டில் ஹெச்.ராஜா குறித்த போலியான கருத்தை எடிட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.