ரிக்சா ஓட்டுபவரின் மகள் ஐ.ஏ.எஸ் டாப்பரா ? வைரலாகும் புகைப்படம்.

பரவிய செய்தி

ஐ.ஏ.எஸ் தேர்வில் முதன்மை மாணவராக தேர்வாகியவர் தன் தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். ரிக்சா ஓட்டுபவரின் மகள் இன்று ஐ.ஏ.எஸ் டாப்பர்.

மதிப்பீடு

சுருக்கம்

கொல்கத்தாவில் தனது பயணத்தின் போது கை ரிக்சா ஓட்டுபவரை அவரது வண்டியில் அமர வைத்து வீதிகளில் இழுத்து சென்ற புகைப்படத்தை shramona Poddar என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அவர் ஐ.ஏ.எஸ் டாப்பர் அல்ல.

விளக்கம்

கை ரிக்சா ஓட்டுபவரின் மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதன்மை மாணவராக தேர்வாகிய தனது தந்தையை அனைவருக்கும் அறிமுகப்படுத்த அவரது வண்டியில் அமர வைத்து இழுத்து செல்லும் நிகழ்வு என ஓர் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

கை ரிக்சா ஓட்டுபவரின் மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று விட்டார் என இந்திய அளவில் பரவிய இப்படத்தை சில அரசியல் தலைவர்களும் தங்களின் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

இந்திய சோசியல் மீடியாவில் வைரலாகும் இப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பயனாளர் shramona Poddar கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவிட்டு உள்ளார். படத்தில் இருப்பவரும் அவரே. கை ரிக்சா ஓட்டுபவர் அந்த பெண்ணின் தந்தை இல்லை என்பதை Mishti.and.meat என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் description-ல் shramona Poddar பதிவிட்ட கருத்துக்களை கொண்டே புரிந்து கொள்ள முடிகிறது.

“ சிறு வயதில் கொல்கத்தா நகரின் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் கை ரிக்சா ஓட்டுபவர்களை பார்க்கும் பொழுது அனுதாபம் கொள்வேன். சமீபத்தில் கொல்கத்தா சென்ற போது கை ரிக்சா ஓட்டுவது எவ்வளவு கடினம் என தெரிந்து கொள்ளவும், ஊக்கப்படுத்தவும் நினைத்தேன். ஆகையால், அங்கிருந்த ரிக்சா மாமாவிடம் கேட்டு அவரை ரிக்சாவில் உட்கார வைத்து ஷோபாபஜார் தெருவில் இழுத்து சென்றதை தெருவில் இருந்த அனைவரும் பார்த்தது அற்புதம் “ என பதிவிட்டு இருந்தார்.

shramona Poddar பல பகுதிகளில் பயணம் செய்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்பவர். அவர் ஐ.ஏ.எஸ் டாப்பர் அல்ல. ரிக்சாவில் அமர்ந்து இருப்பவர் அவரின் தந்தையும் அல்ல என்பதை இதன் மூலம் தெளிவாகியது.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button