ஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா ?

பரவிய செய்தி

அனைத்து மதங்களையும் ” Mental disorders ” என்று அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது ஐஸ்லாந்து.

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

உலகில் உள்ள நாடுகள் பலவும் மதங்களுடன் பிணைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மத நம்பிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐஸ்லாந்து நாட்டின் அரசு அந்நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும்  ” மன நோய் ” என அறிவிக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றி உள்ளதாக ஓர் செய்தி சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

வைரல் செய்தியில், ” அனைத்து மதங்களையும் ” Mental disorders ” என்று அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது ஐஸ்லாந்து. ஐஸ்லாந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 60-3 என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்தின்படி முதற்கட்டமாக பொது இடங்களில் மதரீதியான எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதையோ தடைச் செய்கிறது ” என நீண்ட பதிவை இணைத்து உள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்த யூடர்ன் ஃபாலோயர்கள், அதன் உண்மைத்தன்மைக் குறித்து தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஐஸ்லாந்து நாட்டின் மதம் சார்ந்த புதிய சட்டம் குறித்து ஆராய்ந்த பொழுது அவ்வாறான சட்டம் இயற்றப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

உண்மை என்ன ? 

ஐஸ்லாந்து நாட்டில் அனைத்து மதங்களும் ” மன நோய் ” என அறிவிக்கும் சட்டத்தை இயற்றியது தொடர்பான கட்டுரையானது ஜனவரி 21-ம் தேதி Patheos.com என்ற இணையதளத்தில் முதலில் வெளியாகி இருக்கிறது. Patheos.com என்பது Satire என பொதுவாக அழைக்கப்படும் நையாண்டித்தனமான செய்திகளை வெளியிடுபவர்கள்.

Advertisement

இந்த கட்டுரையை Andrew hall என்பவர் ” Laughing in Disbelief ” என்ற தொடரின் கீழ் எழுதி உள்ளார். மதம் சார்ந்து நையாண்டித்தனமாக கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர் என்பதை அவர்களின் இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

Patheos.com பிரபல நையாண்டித்தளமான “The Onion ” போன்றதே. இவர்கள் அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட மக்கள் பேசக்கூடிய விசயங்களில் நையாண்டித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரைகளை வெளியிடுவார்கள். இதுபோன்ற கட்டுரைகள் சில நேரங்களில் கிண்டலாக இருந்தாலும், சில நேரங்களில் பிரச்சனையாகவும் மாறி விடுகிறது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close