This article is from May 15, 2020

ICMR கூறிய 21 அறிவுரைகள் எனப் பரவும் போலியான ஃபார்வர்டு தகவல் !

பரவிய செய்தி

அடுத்த 6 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவையை ஐசிஎம்ஆர் வெளியிட்டு உள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே வருவதும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இனி கொரோனா வைரஸ் மத்தியில் பாதுகாப்புடன் வாழ்ந்து ஆக வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) ஊரடங்கு திரும்பப்பெற்ற பிறகும் 6 முதல் 12 மாதங்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதாவை என்ன என்பதை அறிவுறுத்தி உள்ளதாக 21 பாயிண்ட்கள் உடன் ஐசிஎம்ஆர் இணையதள லிங்க் வாட்ஸ் அப், மமுகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.

கீழ்காண்பவையே ஐசிஎம்ஆர் கூறியதாக உலாவும் அறிவுரைகள்,

1. Postpone travel abroad for 2 years..
2. Do not eat outside food for 1 year..
3. Do not go to unnecessary marriage or other similar ceremony..
4. Do not take unnecessary travel trips..
5. Do not go to a crowded place for at least 1 year..
6. Completely follow social distancing norms..
7. Stay away from a person who has cough..
8. Keep the face mask on..
9. Be very careful in the current one week..
10. Do not let the any mess around you..
11. Prefer vegetarian food.
12. Do not go to the Cinema, Mall, Crowded Market for 6 Months now. If possible, Park, Party, etc. should also be avoided..
13. Increase immunity..
14. be very carefull while at Barber shop or at beauty Salon parlour..
15. Avoid Unnecessary Meetings, Always keep in mind Social Distancing..
16. The threat of CORONA is not going to end soon
17. Dont wear belt, rings, wrist watch, when you go out. Watch is not required. Your mobile has got time.
18. No hand kerchief. Take sanitiser & tissue if required.
19. Don’t bring the shoes into your house. Leave them outside.
20. Clean your hands & legs when you come home from outside.
21. when you feel you have come nearer to a suspected patient take a thorough bath “.

உண்மை என்ன ? 

மேற்காணும் 21 பாயிண்ட்கள் அடங்கிய அறிவுரையை ஐசிஎம்ஆர் வழங்கியதாக அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது ஊடகத் தகவலோ ஏதும் இல்லை. ஐசிஎம்ஆர் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பத்திரிகை வெளியீடு பிரிவில் கடந்த மே 12,13,14 தேதிகளில் வெளியிட்ட அறிக்கையில் வைரலாகும் தகவலுடன் தொடர்புடைய வெளியீடு ஏதும் இடம்பெறவில்லை.

மேலும், வைரலாகும் செய்தியில் இலக்கண பிழை இருப்பதோடு சைவ உணவை உண்ணுமாறு இடம்பெற்று இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாகிய நேரத்தில் இருந்தே உணவு சார்ந்த தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்பட்டன. சைவ உணவுகளை உண்பவர்களை கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக வதந்தியை பரப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : WHO சைவ உணவு உண்பவர்களை கொரோனா வைரஸ் தாக்காது எனக் கூறியதா ?

Facebook link | archive link

மே 9-ம் தேதி முகநூல் பக்கமொன்றில் ஐசிஎம்ஆர் கூறிய அறிவுரை என பரவும் தகவல் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை வழங்கியதாகவும் பரப்பி இருந்துள்ளனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், பாதுகாப்புடன் இருந்தும் நம்மை வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்வது மிக அவசியமே. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் என தவறான தகவல்களை பகிர வேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader