இடும்பாவனம் கார்த்திக் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்ததாக பரவும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியில் நன்கு அறியப்பட்ட பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவிலும் மற்றும் வழக்கறிஞர் ராஜீவ் திமுக கட்சியிலும் இணைந்தனர். இதையடுத்து, அக்கட்சியில் உள்ள ஒவ்வொருவராக பிற கட்சிக்கு மாறி விடுவார்கள் என்கிற விமர்சனங்களும் எழுகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், அக்கட்சி சார்பாக ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளும் இடும்பாவனம் கார்த்திக் என்பவர் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்ததாக ஹரி நாடார் உடன் கார்த்திக் இருக்கும் புகைப்படத்தை சவுக்கு சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
* அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!*
*தங்களுக்கும், தங்களது குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும்! pic.twitter.com/AkEdCCotlo
— HARI NADAR.A (@AHARINADAR2) December 24, 2020
ஹரி நாடார் உடன் கார்த்திக் இருப்பதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என தெரிந்தே கிண்டலுக்காக பதிவிட்டாரா அல்லது தெரியாமல் பதிவிட்டாரா எனத் தெரியவில்லை.
டிசம்பர்24-ம் தேதி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி ஹரி நாடார் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் இப்படி ஃபோட்டோஷாப் செய்து உள்ளனர். மேலும், இடும்பாவனம் கார்த்தியும் தன் ட்விட்டர் பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவை பகிர்ந்து விமர்சித்து இருக்கிறார்.
என் படத்தை வெட்டி ஒட்டி பகிர்ந்து, அவதூறு பரப்பி தன்னின்பம் அடைவதற்கு பதில், வைகோ சொன்ன தொழிலையே செய்யலாம் தல! 100 % உனக்குப் பொருத்தமாக இருக்கும். https://t.co/aIcvKHqFTM
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) January 28, 2021
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.