This article is from Aug 02, 2018

10 ஆண்டுகள் கடந்தும் கெடாமல் இருந்த இந்தோனேசியா பயங்கரவாதி உடல் ?

பரவிய செய்தி

இந்தோனேசியாவில் பாலி குண்டு வெடிப்பில் மரணத் தண்டணை விதித்து கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் சமுத்ரா உடல் மீண்டும் தோண்டப்பட்ட போது பல ஆண்டுகள் ஆகியும் உடல் கெடாமல் இருந்ததை கண்டு அனைவரும் கதறி அழுத காட்சி.

மதிப்பீடு

விளக்கம்

2002 ஆம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவின் சுற்றுலாப் பகுதியில் 3 இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 202 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாலி குண்டு வெடிப்பு தாக்குதலில் 88 ஆஸ்திரேலியர்கள், 28 பிரித்தானியர்கள், 8 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமானவர்கள் மற்றும் அந்த சதி திட்டத்திற்கு துணைப் போனவர்கள் என இமாம் சமுத்ரா, அம்ரோசி நூர்ஹாஸ்யிம் மற்றும் அலி குப்ரான் ஆகிய 3 மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பல ஆண்டுகள் நீதிமன்ற விசாரனைக்கு பிறகு இம்மூவருக்கும் மரணத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இதன் பின்னர் நவம்பர் 8, 2008-ல் தலைநகர் ஜகார்த்தாவில் அவர்களுக்கு மரணத் தண்டணை பலத்த பாதுகாப்பு உடன் நிறைவேற்றப்பட்டது.

“ 10 ஆண்டுகளுக்கு பிறகு புதைக்கப்பட்ட இமாம் சமுத்ராவின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட போது பிளாஸ்டிக்கை வைத்து மூடிய உறையை நீக்கிப் பார்த்த போது இமாம் உடல் இன்னும் கெடாமல் உள்ளதை கண்டும், அவரது உடலை பார்த்து அதை சுற்றி உள்ளவர்கள் அழுகும் குரலும் கேட்பது அந்த வீடியோவில் கேட்கலாம் ”.

இந்தோனேசியாவில் வைரலாகிய இந்த வீடியோ காட்சிகள் குறித்து kadiv public relations போலீஸ் அதிகாரி setyo wasisto கூறுகையில் “ இமாம் சமுத்ரா உடல் பற்றி இணையத்தில் பரவி வரும் வீடியோ வதந்திகள் என்று தெரிவித்தார்.

“ மேலும், இமாம் சமாதியைப் பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில், இமாம் உடல் புதையுண்டே உள்ளது, தோண்டப்படவில்லை. இணையத்தில் பரவும் வீடியோவை யாரும் நம்ப வேண்டாம். இந்த தகவலை இந்தோனேசியா முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் “

இந்தோனேசியாவைச் சேர்ந்த இமாம் சமுத்ரா முஸ்லீம்கள் கொலைக்கு பழிவாங்குவதற்காக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளை பழி வாங்க வேண்டும் என்று ஜூலை 2003 விசாரணையில் கூறியது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader