இம்ரான் கான் சுடப்பட்ட செய்தியுடன் பழைய புகைப்படத்தை வெளியிடும் ஊடகங்கள்

பரவிய செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு

Archive twitter link 

மதிப்பீடு

விளக்கம்

2018ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானுக்கு எதிராகப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த இருந்தது. இதையடுத்து, இம்ரான் கான் தனது பிரதமர் பதவியினை கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் பிரதமரானார்.  இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலினை முன்னதாகவே நடத்த வலியுறுத்தி இம்ரான்கான் பேரணி நடத்தி வருகிறார். 

Archive link

பாகிஸ்தான் லாகூரில் தொடங்கிய அப்பேரணி நேற்று குஜ்ரன்வாலா அருகே வசிராபாத்தில் நடைபெற்றது. அப்போது இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செய்திகளும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

உண்மை என்ன ?

இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து இந்து தமிழ், DT next, ஒன் இந்தியா, கல்கி ஆன்லைன் போன்ற பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்ட செய்தியில் இம்ரான் கானின் பழைய புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

அப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். அதில் இரவு தர்ணாவின் போது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Archive twitter link 

2014ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்று பிரதமரானார். அந்த தேர்தலில் பெருமளவில் ஊழலை செய்தே அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறி இம்ரான் கான் போராட்டத்தினை முன்னெடுத்தார். அப்போராட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டதே  இப்புகைப்படம்.

இம்ரான் கான் மீதான தாக்குதலுக்கு பிறகு அவரை அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் பாகிஸ்தான் நாட்டின் டவுன் எனும் செய்தி ஊடகத்தில் வெளியாகி இருக்கிறது.

2014ம் ஆண்டு தர்ணாவின் போது எடுக்கப்பட்ட இம்ரான் கான் புகைப்படத்தினை, 2022 நவம்பர் மாதத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு எடுக்கப்பட்டதாகச் செய்திகளில் தவறான  பதிவிட்டுள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து இந்து தமிழ், DT next, ஒன் இந்தியா போன்ற பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில் பதிவிட்டுள்ள புகைப்படம் இம்ரான் கானின் 2014ம் ஆண்டு தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட பழைய புகைப்படம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader