தாலிபான் குழுவில் இம்ரான் கான் ஆயுதத்துடன் இருக்கும் படங்களா ?

பரவிய செய்தி
இம்ரான் கான் சமாதான விரும்பி என்று நம்புகள் ! சீன தயாரிப்பான டைப்56 ரக துப்பாக்கி மற்றும் பயங்கரவாதிகளுடன் இம்ரான் கான் உறவு கொண்டிருந்த போது.
மதிப்பீடு
சுருக்கம்
வடமேற்கு பாகிஸ்தானில் வசிக்கும் பழங்குடி மக்களுடன் இம்ரான் கான் துப்பாக்கிகளை வைத்து இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவைகள். தாலிபான் பயங்கரவாதிகள் இல்லை.
இது பற்றி தன் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் இம்ரான்கான் கூறியுள்ளார்.
விளக்கம்
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் வேளையில், இந்திய விமானப்படை வீரர் விங் கம்மாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட போது , அவரை விடுவிப்பதாக இம்ரான் கான் அறிவித்தார்.
தேச அமைதியின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பேசி வரும் தருணத்தில், இம்ரான் கான் கையில்துப்பாக்கி வைத்து இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சீன தயாரிப்பு ஆயுதங்களுடன், பயங்கரவாதிகள் குழுவில் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
இதே படங்களை வைத்து இதற்கு முன்பு பலமுறை இம்ரான் கான் தாலிபான் பயங்கரவாதிகள் உடன் இருப்பதாக இணைய தளங்களில் வெளியானதை பார்க்க முடிந்தது.
ஆனால், இம்ரான் கான் துப்பாக்கி உடன் இருக்கும் புகைப்படங்களில் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அந்நாட்டின் பழங்குடியினர் ஆவார்.
” Review of Pakistan ” என்ற இம்ரான் கானின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், வடமேற்கு பாகிஸ்தானில் வசித்து வரும் பழங்குடியினர் கலாச்சாரத்தில் அனைவரிடத்திலும் துப்பாக்கிகள் இருக்கும். இம்ரான் கான் பழங்குடியினரின் பின்புலத்தில் இருந்து வந்ததால் அவர்களை பற்றி பிற அரசியல் தலைவர்களை விட எளிதாக புரிந்து கொள்ள முடியும் என இம்ரான் கான் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும், youtube சேனல் ஒன்றில் இம்ரான் கான் பழங்குடி மக்கள் உடன் இருக்கும் புகைப்படங்களின் தொகுப்பை வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். அதில், இம்ரான் கான் துப்பாக்கிகளுடன் இருக்கும் பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.