இன்பநிதி அரசியல் : நையாண்டியான போலி ட்வீட்டை உண்மை என நினைத்து பரப்பும் அதிமுக, பாஜகவினர் !

பரவிய செய்தி

நான் அரசியலுக்கு வரமாட்டேன்.. இன்பானா அறிவிப்பு..

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

டிசம்பர் 14ம் தேதி தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பெற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக, அரசியலுக்கு வரமாட்டேன் என்ற உதயநிதி அமைச்சராகி இருக்கிறார் என்றும், திமுகவில் கலைஞர் கருணாநிதியின் குடும்ப மற்றும் வாரிசு அரசியல் தொடர்கிறது என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையில், உதயநிதியின் மகன் இன்பநிதி ” இனி அரசியலுக்கு வர மாட்டேன் ” என ட்விட்டரில் கூறியதாக ட்வீட் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

Archive link 

இன்பநிதி பெயரில் பரவும் ட்வீட் பதிவை விமர்சித்து தமிழக பாஜகவில் பொறுப்பில் உள்ளவர்களும், ஆதரவாளர்களுமே விமர்சித்து பரப்பி வருவதை காண முடிந்தது.

Archive link

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் ட்வீட் பதிவானது, “ இன்பநிதி உதய் ” , ” @inbanidhiudhay2 ” என்ற ஐடி பெயரில், உதயநிதி அமைச்சராக பொறுப்பிற்கு முன்பாக டிசம்பர் 13ம் தேதி பதிவாகி இருக்கிறது.

@inbanidhiudhay2 என்ற ஐ.டி குறித்து தேடிப் பார்த்த போது, அந்த பெயரில் எந்த ட்விட்டர் ஐடியும் இல்லை. இன்பநிதி உதய் என்ற பெயரிலும் எதும் இல்லை. அதுமட்டுமின்றி, அந்த ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷார்ட் எடிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவே செய்கிறது.

உதயநிதி அமைச்சரான நிலையில் நையாண்டிக்காக இன்பநிதி பெயரில் போலியான ட்விட்டர் பதிவை உருவாக்கி பகிர்ந்து உள்ளனர். ஆனால், அதை உண்மை என நினைத்து பாஜக உள்ளிட்ட கட்சியினரே விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க : தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என உதயநிதி கூறினாரா ?

மேலும் படிக்க : மகளிரணி செயல்படவில்லை என உதயநிதி கூறியதாக போலிச் செய்தியை பகிர்ந்த காயத்ரி ரகுராம் !

இதற்கு முன்பாக, உதயநிதி பெயரில் போலியான நியூஸ் கார்டுகளை உருவாக்கி வதந்தி பரப்பி இருந்தனர். அதுகுறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், நான் அரசியலுக்கு வரமாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி கூறியதாகப் பரப்பப்படும் ட்விட்டர் பதிவு போலியானது. நையாண்டிக்காக எடிட் செய்து பகிரப்பட்ட ட்விட்டர் பதிவை உண்மை என நினைத்து பரப்பி வருகின்றனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader