2029ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என எஸ்பிஐ கூறவில்லை.

பரவிய செய்தி

”2029ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது” என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதிப்பீடு

விளக்கம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இணையதளத்தில் செப்டம்பர் 3, 2022 அன்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையில் இந்தியா 2029-ம் ஆண்டுக்குள் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் எனும் தகவல் இடம் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பெரும்பாலான செய்தி ஊடகங்கள் 2029ம் ஆண்டிற்குள் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளதாக தலைப்பிடப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

உண்மை என்ன ?

ஊடகங்களில் வெளியான செய்தியின் உண்மை தன்மையைப்பற்றி தேட துவங்கியதில், செய்தி தளங்களில் குறிப்பிட்டிருந்த அறிக்கை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணையதளத்தில் கிடைத்தது உண்மை தான்.

எனினும், இந்த அறிக்கை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ நிலைபாடாக தெரிவிக்கவில்லை. மாறாக, இது Ecowrap என்னும் ஆராய்ச்சி குழுவின் அறிக்கை மட்டுமே. இந்த அறிக்கையில் உள்ள பொறுப்பு துறப்பு பகுதியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அந்த பொறுப்பு துறப்பின் தொடக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. Ecowrap என்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உச்சபட்ச (அதிகாரப்பூர்வ) வெளியீடு அல்ல. இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் Ecowrap ஆராய்ச்சி குழுவுடையது தானே தவிர, வங்கியின் கருத்தையோ அதன் துணை நிறுவனங்களின் கருத்தையோ பிரதிபலிப்பது அல்ல.
மேலும் அதன் இறுதியில் பின்வரும் வரி இடம் பெற்றுள்ளது.

 

இந்த Ecowrap அறிக்கையின் பார்வைகள், கருத்துகள் அல்லது தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் யாரேனும் செயல்பட்டால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு வங்கியோ அல்லது இந்த ஆராய்ச்சி குழுவோ பொறுப்பேற்காது.

இந்த பொறுப்பு துறப்பு மூலமாக நமக்கு தெரியவரும் தகவல் என்னவெனில், ’Ecowrap என்னும் ஆராய்ச்சி குழு’ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஒரு அங்கமாக செயல்பட்டாலும் அதன் அறிக்கைக்கும் வங்கிக்கும் எந்த நேரடி தொடர்பும் அல்ல. இது வங்கியின் அதிகாரப்பூர்வ நிலைபாடும் அல்ல. இது Ecowrap ஆராய்ச்சி குழுவின் தனிப்பட்ட கருத்து மட்டுமே.  மேலும் அதன் இறுதியில் பின்வரும் வரி இடம் பெற்றுள்ளது. இந்த Ecowrap அறிக்கையின் பார்வைகள், கருத்துகள் அல்லது தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் யாரேனும் செயல்பட்டால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு வங்கியோ அல்லது இந்த ஆராய்ச்சி குழுவோ பொறுப்பேற்காது.

ஆனால் செய்திகளில் Ecowrap என்னும் சொல் தவிர்க்கப்பட்டு “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிக்கை” என்று மட்டும் தலைப்புகள் இடப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாகவும் Ecowrap அறிக்கைகளைக்கொண்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவ்வாறு வெளியான செய்திகளின் தலைப்பிலேயே “ SBI Ecowrap” என குறிப்பிடப்பட்டு இருந்தன. ஆனால், தற்போது எஸ்பிஐ உடைய அறிக்கை (SBI Report) என்று மட்டுமே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், Ecowrap என்னும் ஆராய்ச்சி குழு எத்தனை ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கியது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது என்பது பற்றிய தகவல்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதளத்தில் இடம்பெறவில்லை.

முடிவு :

நம் தேடலில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஒரு சிறு அங்கமான Ecowrap என்னும் ஆராய்ச்சி குழுவின் அறிக்கையை, வங்கியின் அறிக்கை என வாசகர்கள் தவறான பொருள் கொள்ளும்படி “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிக்கை” என்று மட்டும் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா 3வது பெரிய பொருளாதார பலம் (GDP) கொண்ட நாடாக 2029ம் ஆண்டு உருவெடுக்கும் என்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ரிப்போட் அல்ல என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader