This article is from Mar 09, 2019

இந்தியா நடத்திய Air Strike-ல் இறந்த தீவிரவாதிகள் என வதந்தி.

பரவிய செய்தி

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்டவர்களுக்கே, இதோ தீவிரவாதிகளின் பிணக்குவியல்..செய்தியை தாமதம் பண்ணிட்டானுக பாகிஸ்தானிகள்.

மதிப்பீடு

சுருக்கம்

பாகிஸ்தானில் வெவ்வேறு ஆண்டுகளில் இறந்த மக்களின் உடல்களை வைத்து இந்தியா விமானப்படை நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் என வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

விளக்கம்

பாகிஸ்தான் எல்லையோரத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்த செய்திகள் ஓய்ந்த நிலையில் மீண்டும் அது தொடர்பான வதந்திகள் பரவி வருகின்றனர். அதாவது, இந்திய விமானப்படை தாக்கி உயிரிழிந்தவர்களின் உடல்கள் என இப்படங்களின் தொகுப்புகளை பகிர்ந்து வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

இந்தியா நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் எனப் பரவும் படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்தவை.

முதலில் இருக்கும் படத்தில் அதிகளவில் உடல்களை அடக்கம் செய்வது, ஒரு அறையில் இறந்தவர்களின் உடல்களை குவித்து வைத்து இருக்கும் படம் ஆகியவற்றில் இருக்கும் உடல்கள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாட்டில் வெப்ப அலையால் இறந்தவர்கள். அந்த கோடைக்காலத்தில் 45டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் சென்று உள்ளது.

வெப்பநிலை அதிகரித்த காரணத்தினால் மக்களுக்கு உடல்நிலை பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை அளித்தது. 2015-ல் வெப்பத்தால் மட்டும் 749 பேர் இறந்தனர். 2015-ல் இறந்தவர்களின் உடல்களை அறையில் வைத்து இருக்கும் போதும், கராச்சியில் EDHI அமைப்பு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் போது எடுத்த படங்கள் இவை.

2013-ல் பாகிஸ்தானின் Quetta பகுதியில் சன்னி தீவிரவாத அமைப்பான லக்சர்-இ-ஜன்ங்வி நடத்தியதாகக் கூறும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 90 பேர் இறந்தனர், 160 பேர் காயமடைந்தனர்.

இதில், இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்யும் புகைப்படங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் வெப்பத்தால் இறந்தவர்களின் உடல்களை வைத்து இந்தியாவின் பெருமை பேசுவது இழிவான செயலாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader