This article is from Mar 01, 2019

பயங்கரவாத முகாமில் தாக்குதல் நடத்திய பெண் விமானிகளா ?

பரவிய செய்தி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தி 350 தீவிரவாதிகளை துவம்சம் செய்த வீரமங்கைகள் இவர்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்கள் பற்றிய விவரங்கள் பாதுகாப்பு குறித்த விஷயம் என்பதால் IAF வெளியிடவில்லை.

படத்தில் இருப்பவர்கள் யார் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

விளக்கம்

பாகிஸ்தான் எல்லையோரத்தில் இருந்த ஜெய்ஸ்-இ-முகமத் அமைப்பின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பங்கேற்ற இரு பெண் விமானிகள் என இவர்களின் படங்கள் இந்திய அளவில் வைரலாகியது.

படத்தில் இருப்பவர்கள் பற்றி அறிய இணையத்தில் தேடுகையில் அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துள்ளன.

வைரலாகி வருகின்ற படங்களில் முதலில் இருப்பவர் இந்தியாவின் முதல் பெண் பைட்டர் விமானி  ” Avani Chaturvedi ” ஆவார். மத்தியப்பிரதேச மாநிலத்தின் Rewa மாவட்டத்தைச் சேர்ந்த Avani Chaturvedi IAF -ன் MiG-21 விமானத்தை இயக்கிய முதல் பெண் பைட்டர் விமானி என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

இரண்டாவதாக இருப்பது, IAF விமானப்படையில் பணியாற்றி வரும் Sneha Shekhawat ஆவார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பில் IAF ராணுவ பிரிவை முன்னின்று வழி நடத்தியவர் என்ற வரலாற்றைப் படைத்தார்  Sneha Shekhawat .

” இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பங்குபெற்ற IAF வீரர்கள் ஆண்களா அல்லது பெண்களா , யார் யார் என்ற விவரங்களை பொது வெளியில் வெளியிட முடியாது, அது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என Indian Air Force   தெரிவித்து உள்ளது “.

Avani Chaturvedi மற்றும் Sneha Shekhawat ஆகிய இருவரும் விமானப்படை துறையில் பணியாற்றும் வீரமங்கைகள் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் இவ்விருவரும் ஈடுபட்டனர் என பரவும் செய்திகளுக்கு ஆதாரங்கள் இல்லை.

மேலும் படிக்கஇந்திய வான்படை தாக்குதல் தொடர்பாகப் பரவும் வதந்திகள் !

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader